ரேடியோவுக்கான தமிழ் சொல் என்னவென்று தெரியுமா.?

Advertisement

ரேடியோ தமிழ் சொல் 

பொதுவாக நாம் பேசும் வார்த்தை ஒன்றாக இருக்கும். அதற்கான தமிழ் வார்த்தை ஒன்றாக இருக்கும். மேலும் நாம் எங்காவது வெளியில் செல்லும் போதோ அல்லது பள்ளியிலோ யாரவது தூய தமிழில் பேசினால் அவர்களை பார்த்து கோட்னி இருப்போம். சில பேருக்கு அவர்கள் பேசும் தமிழ் பாஷை புரியாது. இன்னும் சிலர் அதை கிண்டலும் கேலியும் செய்வார்கள். எடுத்துக்காட்டாக வீட்டில் பேசி கொண்டிருக்கும் போது டீவியை போடு என்று சொல்வதற்கு பதிலாக தொலைக்காட்சியை போடு என்று சொன்னால் சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால் டிவி என்பதன் தமிழ் சொல் தொலைக்காட்சி. அதனால் இது போல உள்ள பொருட்களுக்கு தமிழ் வார்த்தைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ரேடியோ என்பதற்கான தமிழ் சொல்லை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரேடியோ என்றால் என்ன.?

ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை ரேடியோ என்று கூறுகிறோம்.

ரேடியோ தமிழ்ச்சொல்:

ரேடியோ என்பதன் தமிழ் சொல் வானொலி ஆகும். இதனை பெரும்பாலும் ரேடியோ என்று தான் அழைப்பார்கள். வானொலி என்றால் பலருக்கும் தெரியாத வார்த்தையாக இருக்கிறது.

நம் முன்னோர்களின் காலத்தில் ரேடியோவின் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஊருக்கு ஒருத்தர் வீட்டில் தான் ரேடியோ உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருப்பதால் அடுத்ததை நோக்கி செல்கின்றனர்.

மேகம் வேறு சொல்
உதவி வேறு சொல்
நடனம் வேறு சொல்
கதிரவன் வேறு பெயர்கள்
உலகம் வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement