லஞ்சம் வேறு பெயர்கள்
வணக்கம் நண்பர்களே. இன்றைய Learn பதிவில் லஞ்சம் என்பதற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்காத வார்த்தை லஞ்சம். இருந்தாலும், பல இடங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை. என்னதான், லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் லஞ்சம் என்பது இருக்கத்தான் செய்கிறது. இதனை தடுக்கவே லஞ்ச ஒழிப்பு துறை என்று ஒரு துறை தனியாக நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் சொல்லுக்கும் பல பெயர்கள் இருக்கும். அதாவது, ஒரு வார்த்தையை குறிக்கக்கூடிய பல சொற்கள் இருக்கும். எனவே, அந்த வகையில் லஞ்சம் என்பதற்கும் வேறு பெயர்கள் உள்ளது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
லஞ்சம் என்பதற்கான வேறு பெயர்கள்:
லஞ்சம் என்பதை பெரும்பாலும் கையூட்டு என்று கூறுவார்கள். அதனை தவிர்த்து வேறு எப்படியெல்லாம் லஞ்சத்தை கூறுவார்கள் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
- கையூட்டு
- மாமூல்
- கைக்கூலி
- ஊழல்
- பரிதானம்
Lancham in English Word:
- Bribery
- Bribe
லஞ்சம் எடுத்துக்காட்டு:
ஒரு உயர் பதவியில் அல்லது ஒரு இடத்தில் அதிகாரிகளாக இருக்கும் நபர்கள், காரியம் ஆக மக்களிடமிருந்து முறைகேடாக வாங்கப்படும் பொருள் அல்லது பணம் லஞ்சம் எனப்படும்.
லஞ்சம் தமிழ் சொல்:
லஞ்சம் என்பதை தூய தமிழ்ச் சொல்லில் ‘கையூட்டு‘ என்று கூறலாம்.
வாக்கியங்கள்:
- 2 லட்சம் கொடுத்ததால் என்னுடைய நிலம் எனக்கு சொந்தம் என உரிமை அளிக்கப்பட்டது.
- இவ்வுலகில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள்.
- லஞ்சம் என்பது சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்று வரலாற்று கல்வெட்டுகள் கூறுகிறது.
- இந்த நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் மூலம் உருவாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
இருள் என்பதை இப்படியெல்லாம் கூட கூறலாமா.. |
NRI என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம் |
பலம் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |