லாபம் வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் லாபம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இன்றைய காலத்தில் பிறருக்கு உதவி செய்வதில் கூட அதனால் நமக்கு என்ன லாபம் என்று யோசித்துவிட்டு தான் பிறருக்கு உதவி செய்கிறோம். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் ஏதேனும் ஒரு லாபம் இருந்தால் தான் நாம் அந்த செயலை செய்வோம். என்ன செய்தால் நமக்கு லாபம் என்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் யோசித்து முடிவு எடுக்கிறார்கள் இன்றைய காலத்து மக்கள். லாபம் என்பது அவசியமாக ஆகிவிட்டது. இந்த லாபம் எனும் சொல்லுக்கு வெல்வேறு பெயர்கள் இருக்கிறது. அவற்றை இப்போது பார்க்கலாமா வாருங்கள்.
லாபம் என்றால் என்ன?
- லாபம் என்றால் ஒரு நிறுவனத்தின் வருவாயில் அனைத்து செலவுகளையும் கழித்து பிறகு மீதமுள்ள பணமே லாபம் ஆகும்.
- ஒரு பொருளை அசல் விலையை விட அதிக விலைக்கு விற்கும் போது வரும் தொகையில் ஏற்படும் மீதமே லாபம் ஆகும்.
- லாபம் என்பது நமக்கு அன்றாட வாழ்வில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் நாம் விற்கும் பொருள்களில் நமக்கு லாபம் வரும் அளவிற்கு விலை நிர்ணயித்து தான் விற்கிறோம்.
- இது வருமானம் என்றும் அழைக்கப்படுகிறது. வருமானம் நமக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
லாபம் வேறு சொல்:
- வருமானம், ஆதாயம், பயன், ஊதியம்
லாபம் in English:
- Profit
- Gain
எடுத்துக்காட்டு:
- அவர் பொருட்களை வாங்கி லாபத்தில் விற்கிறார்.
- எங்கள் திட்டங்களை மாற்றுவதினால் எங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
- நான் வாங்கி விற்ற பொருள்களில் 100 ரூபாய் லாபம் அடைத்தேன்.
- அவர் விற்பனையிலிருந்து நல்ல லாபம் ஈட்டுகிறார்.
- லாபம் கிடைத்ததால் அவர் கண்கள் பிரகாசித்தது..
- நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் அதிக லாபம் ஈட்டுகிறது.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |