வழித்தடம் வேறு சொல்
நம்முடைய தமிழ் வார்த்தைகளில் பல வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் நமக்கு அர்த்தங்கள் ஆனது மாறுபடும். அதாவது ஒரு வார்த்தைக்கே பல அர்த்தங்கள் நிறைந்திருக்கிறது. அது போல நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்களும் மாறுபடும். அர்த்தங்கள் எப்படி நிறைய இருக்கிறதோ அதே போல சொற்களும் நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டாக கூறப்போனால் நாம் புளிக்குழம்பு என்று கூறுவோம். ஆனால் இதனை சென்னையில் காரக்குழம்பு என்று கூறுவார்கள். இது போல சொற்கள் நிறைய இருக்கிறது. நம்முடைய பதிவில் நிறைய சொற்களுக்கு பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வழித்தடம் என்பதற்கு வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.
வழித்தடம் என்றால் என்ன.?
நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதையை தான் வழித்தடம் என்று கூறுகிறோம். எடுத்துக்காட்டாக கூறினால் நீங்கள் புதிதாக ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் நீங்கள் இருப்பது தஞ்சாவூர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் நீடாமங்கலம் செல்ல வேண்டும். அப்போது அங்கிருந்து என்ன பேருந்துகள் செல்கிறது என்று விசாரிப்பார்கள். அதுவே பைக்கில் செல்கிறீர்கள் என்றால் நீடாமங்கலத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்பீர்கள் அல்லவா! அவர்கள் இந்த வழியாக செல வேண்டும் என்று கூறுவார்கள். இதனை தான் வழித்தடம் என்று கூறுகிறோம்.
இதுவே திருவாரூர் செல்வதற்கு பேருந்தில் ஏறுவதற்கான நிற்கிறீர்கள் என்றால் ரொம்ப நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை இந்த வழியாக தான பேருந்து வரும் என்று கேட்பீர்கள். இதனை தான் வழித்தடம் என்று கூறுவோம்.
இன்னொரு முறையில் கூறப்போனால் ஒருவன் செயலில் மாற்றமோ அல்லது ஒழுக்கத்தில் சிறந்து விளங்காமல் போனால் அவன் அவனது வழித்தடம் மாறுகிறது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இது போல நாம் கூறும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களானது மாறும். அதனால் இப்போது வழித்தடம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.
எடுத்துக்காட்டு:
- அவர் தனது வாழ்க்கையின் வழித்தடத்தை மாற்றி விட்டார்.
- மழைகாரணமாக பேருந்து வழித்தடம் மாறி வருகின்றது.
வழித்தடம் என்பதற்கு வேறு பெயர்கள்:
வழித்தடம் என்பதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- பயணத்தடம்
- இயக்கவழி
- சாலை வழித்தடம் (போக்குவரத்துக்கேற்ப)
- முன்னேற்றப் பாதை (வாழ்க்கை முன்னேற்றம் சார்ந்த)
வழித்தடம் in English:
வழித்தடம் என்பதனை ஆங்கிலத்தில் Route, Pathway என்று அழைக்கலாம்.
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |













