வழி வேறு சொல் | வழி வேறு பெயர்கள்
பொதுவாக தமிழ் மொழியில் எழுதுவது அல்லது படிப்பதில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் இது கூட உனக்கு தெரியாதா என்று கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் இருந்தாலும் கூட அவற்றறின் ஒவ்வொரு எழுத்துக்களும் உச்சரிக்கும் இடத்திலும், பேசும் அல்லது எழுதும் வார்த்தைக்கு ஏற்றவாறு வேறுபட்ட கருத்துக்களை கொண்ட ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ர, ற, ள, ல, ழ, ந, ன மற்றும் ண என இத்தகைய எழுத்துக்கள் பெரும்பாலும் தமிழ் மொழியினை கற்கும் பட்சத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக தான் காணப்படுகிறது.
ஏனென்றால் பெரும்பாலும் இந்த எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கும். அதேபோல் இத்தகைய எழுத்துக்கள் ஒவ்வொரு அர்த்தங்களை குறிக்கும் விதமாகவும் காணப்படுகிறது. அதாவது வலி, வழி மற்றும் வளி என்ற சொற்கள் ஒரே மாதிரியாக தெரிந்தாலும் கூட அவை உச்சரிப்பிலும், பொருள் படுவதிலும் வெவ்வேறு விதமாக தான் இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் வழி என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
வழி வேறு பெயர்கள்:
வழி என்ற சொல்லுக்கான மற்ற பெயர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- பாதை
- வீதி
- தடம்
- சுவடு
- ஒழுங்கை
- சாலை
வழி என்றால் என்ன..? | வழி என்பதன் பொருள்:
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு சைக்கிள், வண்டி, கார் மற்றும் நடைபழக்கம் என இத்தகைய முறையில் பாதை வழியாக செல்லும் முறையே வழி எனப்படும்.
மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நம்மை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் ஒன்றாக அமைவதும் வழி ஆகும். அதேபோல் ஆரம்ப காலத்தில் இதனை பாதை என்று தான் சொல்லி வந்தார்கள்.
அதன் பிறகு காலத்திற்கு ஏற்றவாறு வழி என்ற சொல்லாக மாறி வந்து விட்டது.
எடுத்துக்காட்டாக:
- நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சொந்த பேருந்தில் ராமேஸ்வரம் செல்வதற்கு வந்து கொண்டிருந்த போது வழி தவறி மாற்று பாதையில் தவறுதலாக வந்து விட்டோம்.
- வரும் வழியில் எனது நீண்ட நாள் நண்பன் ராமுவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
வழி அல்லது பாதையின் வகைகள்:
- ஒருவழிப்பாதை
- ஒற்றையடிப்பாதை
- இருவழிப்பாதை
- நடை பாதை
- ஓடு பாதை
- இருப்புப்பாதை
- உணவுப்பாதை
வழி Meaning in English:
- Way
- Route
- Path
- Wipe
- Road
வழி என்ற சொல்லுக்கான நிகரான ஆங்கில சொற்கள் மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் ஆகும்.
சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |