Vaanam Veru Peyargal in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் வானம் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வானம் என்றால் என்ன..?
பொதுவாக ஐம்பூதங்களில் ஒன்றே வானம் ஆகும். வானம் என்பது பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்து காணப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியை குறிக்கும்.
இது வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும். வானியலில் வானமானது “வானக்கோளம்” எனவும் அழைக்கப்படுகின்றது. வானம் என்பது கற்பனையானது என்றும் அதில் சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
வானம் என்பது இன்றியமையாதது இதனாலையே இந்துக்கள் சிதம்பரத்தை வானத்திற்கு உரிய தலமாக கொண்டு வழிபடுகின்றனர். அங்குள்ள இறைவனின் பெயர் ஆகாச லிங்கம் ஆகும்.
இவ்வாறு சிறப்புடைய வானத்திற்கு வேறு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம் வாங்க..
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
வானம் வேறு பெயர்கள்:
- அண்டம்
- ககனம்
- ஆகாயம்
- உம்பர்
- எமிலி
- ககண்டு
- கார்
- கொண்டல்
- சேண்
- நிருபம்
- மஞ்சு
- விசும்பு
- விண்
- ஆகாயம்
- அத்திட்டம்
வானத்தில் காணப்படும் பொருட்கள் என்னென்ன..?
வானத்தில் சூரியன், நிலா, விண்மீன்கள், முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே ஆகும்.
வானத்தின் நிறம்:
பொதுவாக பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமம் ஆகும்.
அந்தி நேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும்.
கருணை என்பதற்கான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |