வித்தியாசம் வேறு சொல்
இன்றைய பதிவில் வித்தியாசம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழ் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். அந்த சொற்களுக்கு வேறு சொல்லும் இருக்கும். ஆனால் வேறு சொற்களை பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. வேறு சொல் தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வித்தியாசம் என்றால் என்ன என்று நமக்கு தெரியும் ஆனால் அதற்கான வேறு சொற்களை பற்றி நாம் அறிவதில்லை. நம் பொதுநலம் வலைத்தளத்தில் தினமும் ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்று வித்தியாசம் வேறு சொல்லை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
வித்தியாசம் என்றால் என்ன?
வித்தியாசம் என்பது, ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடும்போது தோன்றும் நிலை. ஒற்றுமையற்ற அல்லது வேறுபட்டதாக இருக்கும் தரம் அல்லது நிலை என்பதும் வித்தியாசத்தின் பொருள்.
வித்தியாசம் என்றால் தமிழில் வேறுபாடு என்று பொருள். வேறுபட்டது, மாறுபட்டது என்று பொருள்படும்.
வித்தியாசம் என்பது நாம் ஒருவருக்கும் இனொருவருக்கும் இடையே பார்க்கும் வேறுபாடு தான் வித்தியாசம் ஆகும். எடுத்துக்காட்டாக இரட்டை குழந்தைகள் தோற்றத்தில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் அதுதான் வித்தியாசம் என்று சொல்வார்கள்.
வித்தியாசம் வேறு சொல்:
வேறுபாடு, வேற்றுமை, பேதம், ஒப்பின்மை, விரோதம், முரண்பாடு, ஏற்றத்தாழ்வு, ஒற்றுமையின்மைவித்தியாசம் in English:
- Difference
- Contrariety
- Distinction
எடுத்துக்காட்டு:
- இரண்டு வீடுகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
- எனக்கும் என் தங்கைக்கும் 6 வயது வித்தியாசம்.
- என்னிடம் இருக்கும் பொருளுக்கும் அவளிடம் இருக்கும் பொருளுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை.
- சரிக்கும் தவறுக்கும் உள்ள வேற்றுமை அவளுக்குத் தெரியும்.
- சில குடியிருப்புகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
- இவன் அண்ணனிடம் ஒற்றுமையாக இருக்க மாட்டான், எப்பொழுதும் சண்டையிடுவான்.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |