வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?

Updated On: April 4, 2025 5:16 PM
Follow Us:
Virodham Veru Sol
---Advertisement---
Advertisement

விரோதம் வேறு சொல் | Virodham Veru Sol | விரோதி வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விரோதம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதையும், விரோதி என்பதற்கான வேறு சொல் என்ன என்பதையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். நீங்கள் விரோதம், விரோதி என்ற வார்த்தைகளின் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு வேறு இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். அதனை தொடர்ந்து தற்போது விரோதம், விரோதி என்ற சொற்களுக்கான வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்.

விரோதம் பொருள் | விரோதம் என்றால் என்ன.?

விரோதம் என்பது வலுவான வெறுப்பு அல்லது எதிர்ப்பைக் குறிக்கிறது. எதிரான கருத்துக்களை எடுத்துரைப்பதை விரோதம் என்று கூறுவார்கள். அதேபோல் தீங்கு செய்பவர்களை அல்லது நமக்கு எதிராக பேசுபவர்களை விரோதி என்று கூறுவார்கள்.

இயல்பு என்பதன் வேறு சொல் என்ன.?

விரோதி என்றால் என்ன.?

நமக்கு தீங்கு விளைவிப்பவர்களை விரோதி  என்று கூறுவார்கள். உங்களிடம் ஏதாவது சண்டை போட்டிருப்பார்கள். அவர்களிட நீண்ட காலமாக பேசாமல் இருந்திருப்பீர்கள்.  இவர்களை என்னோட விரோதி என்று மற்றவர்களிடம் கூறுவார்கள்.

இந்த விரோதம் ஆனது தலைமுறை தலைமுறையாக கோடா இருக்க கூடும். உங்களுக்கும் மற்றவருக்கும் விரோதம் இருக்கிறது என்றால் அதனை உஙக்ளோட விட்டு விடுங்கள். அடுத்த தலைமுறையினருக்கும் அதனை கொண்டு செல்ல கூடாது. பிறப்பு என்பது ஒருமுறை தான் அதனை மகிழ்வோடு வாழுங்கள். சரி வாங்க விரோதம் மற்றும் விரோதி என்பதற்கான வேறு சொற்களை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு:

அவன் என்னுடைய பரம்பரை விரோதி.

அவனிடம் இருக்கும் பகை எனக்கு மாறவே இல்லை.

விரோதம் வேறு சொல்:

  • பகை 
  • மாறுபாடு 
  • விரோதவாணி 
  • எதிர்ப்பு
  • முரண்பாடு

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் விரோதம் என்ற வார்த்தைக்கான வேறு சொல் ஆகும். ஆனால், பெரும்பாலும் விரோதம் என்பதை பகை என்ற சொல்லினை பயன்படுத்தி தான் கூறுவார்கள்.

விரோதி வேறு சொல்:

  • சத்துரு
  • பகைவன்
  • எதிரி
  • ஒரு தமிழாண்டின் பெயர்

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் விரோதி என்ற சொல்லுக்கான வேறு சொல் ஆகும்.

மூடன் என்பதன் வேறு சொல் என்ன.?

விரோதி in English:

விரோதி என்பதை ஆங்கிலத்தில் Enemy, Foe என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now