Vivaatham Veru Sol in Tamil | விவாதம் என்பதன் மற்றொரு சொல்
அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு துன்பமானது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்படிப்பட்ட துன்பத்தினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தான் வெளிப்படுத்திவார்கள். ஏனென்றால் இது அவர் அவரின் குணங்கள். இதனை மாற்றுவது என்பது நம்மால் முடியாது ஒன்று. அந்த வகையில் இத்தகைய துன்பத்தினை பாடல் கேட்பது, கோபமாக கத்துவது, சண்டையிடுவது அல்லது மற்றொருவரிடம் விவாதம் செய்வது என இந்த முறைகளில் வெளிப்படுத்துவார்கள். அப்படி பார்த்தால் ஒரு செயலானது பல முறைகளில் ஒவ்வொருவராலும் வெளிப்படுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு சொல் பல இதர பெயர்களையும் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று விவாதம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் என்ன என்பதை விரிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
விவாதம் வேறு சொல்:
விவாதம் என்ற சொல்லுக்கு உரிய வேறு பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தர்க்கம்
- பேச்சு சண்டை
- வாக்குவாதம்
- நியாய வாதம்
- தருக்கம்
- வாய் சண்டை
- சர்ச்சை
- சச்சரவு
விவாதம் என்றால் என்ன..?
விவாதம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் இடையே ஏதோ ஒரு குறிப்பிட்ட தலைப்பினை பற்றி பேசப்படும் முறையே விவாதம் எனப்படும். மேலும் அத்தகைய தலைப்பிலும் எது சரி என்பதை பற்றி பேசுவதே விவாதம் ஆகும்.
அந்த வகையில் இத்தகைய விவாதங்கள் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் விவாதங்கள் எப்போது வாய் வழியே சொற்பொழிவுகளில் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
மேலும் இந்த விவாதங்களில் குறிப்பிட்ட தலைப்பில் உள்ள உண்மை தன்மையினை அறிய முடியும்.
எடுத்துக்காட்டாக:
ராமு மற்றும் சோமு என்ற இரு கல்வி நிறுவன உயர் அதிகரிகளிடேயே ஆன்லைன் வகுப்பு என்பது மாணவர்களுக்கு நன்மையா..? அல்லது தீமையா..? என்ற விவாதம் இன்று வெகு விறு விறுப்பாக நடைபெற்றது.
விவாதம் பொருள்:
விவாதம் என்பதற்கு இருவருக்கு இடையே மரியாதைக்குரிய முறையில் எதிரெதிர் கருத்துகளின் மீது தெளிவான முறையில் பேசப்படும் ஒன்றாகும்.
விவாதம் Meaning in English:
- Discussion
- Debate
- Argument
இத்தகைய ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் விவாதம் என்ற சொல்லுக்கான ஆங்கில வார்த்தை ஆகும்.
சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |