வீடு வேறு பெயர்கள்
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் கனவுகள் இருக்கும். அதில் ஓன்று தான வீடு கட்டுவது. இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஆசை என்னவென்றால், சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது தான். அது சிலருக்கு கனவாகவும் பலருக்கு லட்சியமாகவும் இருக்கிறது. பொதுவாக வீடு என்பது நம் அனைவருக்குமே இருக்கும். சிறிய வீடாக இருந்தாலும் சரி பெரிய வீடாக இருந்தாலும் சரி அது சொந்த வீடாக இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கும்.
சரி இப்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கும். அதுபோல சிலருக்கு இரண்டு மூன்று பெயர்கள் கூட இருக்கும். மனிதர்களுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் நாம் சொல்லும் சில வார்த்தைகளுக்கு கூட வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் பெயர்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று வீடு என்பதை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
வீடு என்பதை வேறு எப்படி அழைக்கலாம்..?
மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கட்டப்படுவது தான் வீடு. இந்த வீடு ஆனது அன்பு, மற்றும் பல பொருட்கள் கொண்டு காட்டப்படுகிறது. இவற்றில் பல வகைகள் இருக்கிறது. அதாவது குடிசை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு, அடுக்கு மாடி வீடு என்று பல வகைகளை இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் காலத்தில் குடிசை வீடுகளாக தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் குடிசை வீடுகளே பார்க்க முடிவதில்லை. எல்லாம் கட்டிட வீடுகளாக மாறிவிட்டது. எங்கே சென்றாலும் நம்ம வீடு போல இருக்காது. ஏனென்றால் எவ்வளவு வேலை இருந்தாலும் நம்மவீட்டில் வந்து உட்கார்ந்தாலே பாதி உடல் அசதி நீங்கி விடும். அப்பாடா என்று மூச்சை நிம்மதியாக விடுவோம். நம்முடைய
நண்பர்களை வீட்டிற்கு வாங்க என்று அழைப்போம். யாராவது நண்பர்கள் நம் தெருவிற்கு வந்தால் இது தான் என் வீடு என்று சொல்வோம். அப்படி அலைக்கும் வீடுகளுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அதனை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் தான் இந்த பதிவில் வீடு என்பதற்கான பல பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
எடுத்துக்காட்டு:
- எனது வீடு குடிசை வீடு, அதனால் இந்த வருடம் எப்படியாவது மாடி வீடு கட்டிட வேண்டும்.
- எங்க வீடு ரொம்ப அழகாக இருக்கும்.
- நாளை எங்கள் வீட்டில் விருந்து, கண்டிப்பாக வரணும்.
இல்லம் வேறு பெயர்கள்:
- இல்
- இல்லம்
- உறையுள்
- அகம்
- அடுக்ககம்
- குடில்
- நிலையம்
- மனை
- மாளிகை
- முன்றில்
- குடிசை
- குரம்பை
- குறும்பு
- மாடம்
- நெடுநகர்
வீடு in english:
வீட்டை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- House
- Home
- Residence
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |