வீண் வேறு சொல் மற்றும் வீண் பேச்சு வேறு சொல்..!

Advertisement

வீண் வேறு சொல் | வீண் பேச்சு வேறு சொல்

நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். இதனை வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இப்போது நாம் நம்முடைய குழந்தைக்கும் ஒரு சொல் தரும் பல சொற்களை வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இதனை சொல்லி கொடுப்பதற்கு நாம் கூகுளில் தான் சர்ச் செய்வோம். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் பல்வேறு வகையான வார்த்தைக்கு பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீண் என்ற வார்த்தையை வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வீண் என்றால் என்ன.?

வீண் என்பது தேவையில்லாத விஷயத்தை குறிப்பதாகும். நமக்கு பயன்படாத விஷயத்தை கூறுவதற்கு சொல்லும் வார்த்தையாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக குடிநீர் குழாயில் தண்ணீர் வருகிறது என்று வைத்து கொள்வோம். இந்த நீரானது வேஸ்ட் ஆக கீழே போனால் வீணா தண்ணீர் கீழே போகிறது என்று கூறுவோம்.

அன்றாடம் செய்யும் செலவுகள் ஆனது அதிகமாக செய்தாலோ அல்லது தேவையில்லாமல் செய்தாலோ நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் வீண் செலவுகள் செய்யாதே என்று கூறுவார்கள்.

மாணவர்கள் படிக்காமல் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தால் அம்மா வீணாக பேசாமல் புத்தகத்தை வைத்து படி என்று கூறுவார்கள்.

வீண் வேறு பெயர்கள்:

வீண் என்ற வார்த்தையை வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

  • பயனின்மை
  • தேவையற்றது
  • பயனற்றது

போன்ற வார்த்தைகள் மூலம் வீண் என்று வார்த்தையை அழைக்கலாம்.

மேக்அப் என்பதன் தமிழ் சொல் என்ன தெரியுமா

வீண் பேச்சு வேறு சொல்:

வீண் பேச்சு என்ற வார்த்தையானது அடிக்கடி பயன்படுத்த கூடிய வார்த்தையாக இருக்கிறது. தேவையில்லாமல் ஏதாவது பேசி கொண்டிருந்தாலோ அல்லது எந்த பேச்சு ஆனது பயனற்று இருந்தாலோ சரி அதனை வீண் பேச்சு என்று கூறுவார்கள். இந்த வீண் பேச்சு என்ற வார்த்தையை வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

  • குழிவாக்கல்
  • பயனில்லாத பேச்சு
  • வெட்டிப் பேச்சு
  • தேவையில்லாத பேச்சு

வீண் In English:

வீண் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

  • Waste
  • Uselessness
  • Unnecessary
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement