வெளிப்படை வேறு சொல் | Velippadai Veru Sol in Tamil

Advertisement

Velippadai Veru Sol in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் வெளிப்படை என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் என்பது இருக்கும். இதனை பள்ளி பருவத்தில் கற்று இருப்போம். ஆனால், இப்போது பல சொற்களுக்கான வேறு சொல் பற்றி நமக்கு தெரிவதில்லை. ஆகையால், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு சொற்களில், இப்போது Velippadai Veru Sol in Tamil பற்றி பார்க்கலாம்.

வெளிப்படை என்பது வெளிப்படையாக பேசுவது, வெளிப்படையாக பழகுவது என வெளிப்படையாக உள்ளதை குறிப்பதாகும். இதனை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல், வெளிப்படை என்பதற்கு வேறு சொற்களும் உள்ளது. அதனை பற்றியும் அறிந்துகொள்வது அவசியம் அல்லவா.! எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் வெளிப்படை என்றால் என்ன.? வெளிப்படை என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு சொல் என்ன.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வெளிப்படை வேறு சொல்:

  • தெளிவான
  • ஒளிவு மறைவு அற்ற
  • விவரமான
  • மறைக்கப்படாத
  • இரகசியமற்ற
  • திறந்த
 வெளிப்படை என்ற சொல்லுக்கு தெளிவான, ஒளிவு மறைவு அற்ற, மறைக்கப்படாத இரகசியமற்ற, திறந்த மற்றும் விவரமான  போன்ற சொற்கள் வேறு சொல்லாக இருக்கிறது. 

வெளிப்படை என்றால் என்ன.?

வெளிப்படை என்பது, எந்த விதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக கூறுவது, எழுதுவது, செய்வது ஆகும். அதாவது, அனைவருக்கும் புரியும்படி வெளிப்படையாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பது ஆகும்.

இலக்கணத்தில் வெளிப்படை என்பது, ஒருசொல் வெளிப்படையாக எல்லாருக்கும் புரியும் வண்ணம் உணர்த்துவது ஆகும். சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை ஆகும்.

வெளிப்படையாக in English:

 வெளிப்படை என்பதை ஆங்கிலத்தில் Explicit, Plain மற்றும் Obvious  என்று கூறுவார்கள். 

 எடுத்துக்காட்டு:

  • பாரதி படித்தாள்
  • மரம் நடுவோம் மழை பெருவோம்.
  • பணியை எவ்வாறு முடிப்பது என்பது குறித்து ஆசிரியர் வெளிப்படையான வழிமுறைகளை வழங்கினார்.
  • ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து ஒப்பந்தம் வெளிப்படையாக இருந்தது.
  • நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களைப் பற்றி அவள் வெளிப்படையாக இருந்தாள்.
  • படத்தில் வெளிப்படையான வன்முறை காட்சிகள் இருந்தன.

இந்த வாக்கியங்களை பார்த்தாலோ அல்லது கூறினாலோ அனைவருக்கும் புரியும். இதுபோன்று அனைவருக்கும் புரியும்படி வெளிப்படையாகத் தன் பொருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனப்படும்.

ஆர்ப்பாட்டம் என்பதற்கான வேறு சொல்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement