10 Easy Proverbs in English and Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எண்ணற்ற பழமொழிகள் உள்ளது. பெரும்பாலான பழமொழிகள் நமக்கு கஷ்டமாக இருப்பதுபோல் இருக்கும். அதாவது, எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். முக்கியமாக குழந்தைகள் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். ஆகையால், இப்பதிவில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், 10 ஈஸியான பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கொடுத்துள்ளோம்.
பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தையும் பழமொழியை கற்று அதற்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, முதல் அடிப்படை விஷயமாக எளிமையாக இருக்கும் பழமொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் அடிப்படையான விஷயங்களில் இருந்து தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது தான் மேன் மேலும், படிக்கும்போது அவர்கள் அடிப்படையான விஷயத்தை கருத்தில் கொண்டு நன்றாக புரிந்து கற்று தெரிந்துகொள்வார்கள்.
குழந்தைகளுக்குக்கான10 எளிமையான பழமொழிகள்:
வ. எண் | பழமொழி ஆங்கிலத்தில் | பழமொழி தமிழில் |
1 | Face is the index of the mind | அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
2 | No Pain No Gain | உழைப்பில்லாமல் ஊதியம் இல்லை |
3 | Self Help is the Best Help | தன் கையே தனக்கு உதவி |
4 | Knowledge is Power | அறிவே ஆற்றல் |
5 | Efforts Never Fail | முயற்சி திருவினையாக்கும் |
6 | Hear more, but talk less | அதிகம் கேள், குறைவாகப் பேசு |
7 | Brevity is the soul of it | சுருங்கச் சொல்லி விளங்க வை |
8 | Whatever you do, do it properly | செய்வதை திருந்தச் செய் |
9 | There is no medicine for fear | அச்சத்திற்கு மருந்து இல்லை |
10 | Many a Slip Between the Cup and Lip | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |