இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

Advertisement

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 

வணக்கம் நண்பர்களே. பொதுநலம்.காமின் இனிமையான நேயர்களே. இன்று நம் பதிவில் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க நண்பர்களே அது என்ன தகவல் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். நமது இந்திய நாட்டில் எத்தனையோ தண்டனை சட்டங்கள் உள்ளன. அதில் நாம் இந்த பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 யின் (IPC Section 323) விளக்கத்தை பற்றி தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்டம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

IPC 323 சட்டத்தின் விளக்கம்: 

  • பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளில் காயம் என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் 1860 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  • இந்திய தண்டனை சட்டம் 323 என்பது தானாக முன்வந்து காயப்படுத்துபவர்களை தண்டிப்பதற்காக கொண்டுவரப்பட்டது இதனை யார் புரிந்தாலும் அவர்கள் குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர்.
  • 323 சட்டத்தின் தண்டனை என்னவென்றால் ஒரு நபர் மற்றொரு நபரை தாக்க முயன்று அதில் அந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் தாக்கிய நபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் அல்லது இரண்டு தண்டைனையும் சேர்த்து விதிக்கப்படும்.
  • 323 சட்டத்திற்கு ஜாமின் உண்டு. இந்த சட்டத்தின் கீழ் ஜாமின் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இந்திய தண்டனை சட்டம் 376
  • “ஹர்ட் (HURT)” ஒரு முக்கியமான IPC இன் அனைத்து குற்றங்களிலும் காணப்படுகிறது.
  • இந்த சட்டத்தின் கீழ் செய்யக்கூடாத தவறுகள் ஒரு நபருக்கு காயத்தை ஏற்படுத்துதல், வழியை ஏற்படுத்துதல், சேதத்தை ஏற்படுத்துதல் அல்லது ஊனப்படுத்துதல் போன்றவை செய்ய கூடாத தவறுகள் ஆகும்.
  • கருத்தை விவரிப்பதற்கு பல ஒத்த சொற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் சொற்களை பயன்படுத்தினால் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
  • இச்சட்டத்தின் கீழ் எளிய காயம் முதல் கடுமையான காயம் வரை பல வேறுபட்ட அளவு காயங்கள் இருந்தால் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
  • இந்த சட்டத்தில் உணர்ச்சி அல்லது மன உளைச்சல் குற்றத்தின் அடிப்படையில் சேர்க்கப்படவில்லை.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement