இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-யின் விளக்கம்

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377

இந்திய தண்டனை சட்டம் பிரிவு-377

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். இதுவரை நம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தண்டனை சட்டங்களை பற்றி பார்த்தோம். அந்த வகையில் இன்று நாம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 விளக்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.  இச்சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்திற்ககான தண்டனை என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

IPC 377 சட்டத்தின் விளக்கம்:

  • 1860 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவு தான் 377 சட்டம். காரணம் அப்போது இருந்த இங்கிலாந்து அரச குடும்பத்தில் இதை தவறான உறவாக கருதியதால் இந்த தண்டனை சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இந்த சட்டம் முழுவதும் விக்ட்டோரியன் அரச குடும்பத்தின் உணர்வுகளை மையப்படுத்தி மட்டுமே கொண்டு வரப்பட்டது.
  • இந்த சட்டம் இந்தியாவில் மிகவும் பழமையான சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு ஆகும். இச்சட்டம் பெரிய வரலாற்றை கொண்டுள்ளது.
  • பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த தண்டனை சட்டம் கொண்டுவரப்பட்டது. பாலியல் உறவு முறைகளை வரையறுக்க இந்தியாவில் சில தண்டனை சட்டங்கள் உள்ளன. அதில், இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்டங்களில் ஒரு சட்ட பிரிவு ஆகும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354- யின் விளக்கம்
  • இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த தண்டனை சட்டத்தை “தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா” தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
  • இந்த சட்டத்தில் ஓரின சேர்க்கை, பாலின சேர்க்கை எனப்படும் “பெண்-பெண் அல்லது ஆண்-ஆண்” உறவு கொள்ளும் உறவு முறை தவறானது என்று கூறப்படுகிறது.
  • இச்சட்டத்தில் சாதாரண மக்கள் கொள்ளும் சில பாலியல் உறவு முறைகளும்  தவறு என்று கூறப்படுகிறது.
  • ஆனால் இந்த சட்டம் திருநங்கைகளுக்கு எதிராகவும், பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராகவும் முறையின்றி பயன்படுத்தப்படுகிறது.

377 சட்டம் நீக்கப்பட காரணம் என்ன:

இந்த சட்டத்தை 1860 ஆம் ஆண்டு கொண்டு வந்த இங்கிலாந்து அரசே இதை 1967 ஆம் ஆண்டு திரும்ப பெற்றுக்கொண்டது. காரணம் இது மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனால், பிற நாடுகளில் இந்த தண்டனை சட்டம் நீக்கப்பட்டது. இதுபோன்ற நிலையில் தான் நாஸ் பவுன்டேஷன்” என்ற இயக்கம் இந்த தண்டனை சட்டம் தவறானது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன் பின் இந்த தண்டனை சட்டத்தை விசாரித்த நீதிபதிகள், இது மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது என்றும் இது சட்டங்களில் உள்ள வரையறைகளை மீறுகிறது என்பதை கண்டறிந்து இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

 

2009 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. அதனால், இந்த சட்டத்தை நீக்காமல் இருந்தது. ஆனால் மத அமைப்பு என்று சொல்லக்கூடிய இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு குரல் கொடுத்தனர். அதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை நீக்குவது தவறான செயலில் முடிய வாய்ப்புள்ளது என்று கூறியது. இறுதியில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைத்த மாற்றமே சிறந்தது என்று கூறப்பட்டது.

506 2 IPC in Tamil
IPC 376 in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com