சிங்கத்தையே வெல்லக்கூடிய விலங்குகள்..!
வணக்கம் நண்பர்களே..! காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தையே வெல்லக்கூடிய டாப்-6 விலங்குகள் பற்றி தான். இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். சிங்கத்தின் கர்ஜனை, அதன் தோற்றம் மற்றும் அதன் வேட்டையாடும் திறன் இவை எல்லாவற்றையும் வைத்து தான் சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைக்கிறோம்.
அப்படிப்பட்ட சிங்கத்தை விட பலசாலியாக சில விலங்குகள் காட்டில் வாழுகிறது அவற்றை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் பதிவை முழுதாக படித்து தகவலை தெரிந்துக்கொள்ளுங்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்
சிங்கத்தையே வீழ்த்தக் கூடிய 6 விலங்குகள்:
1. யானை:
நமது லிஸ்ட்டில் முதலாவதாக இருப்பது யானை தான். இந்த உலகத்தில் நிலத்தில் வாழக்கூடிய உயிரினங்களில் யானைகள் தான் மிகவும் பெரியது மற்றும் அதிகம் பலம் பொருந்திய உயிரினம் ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்ரிக்க யானைகளை கூறலாம்.
இவற்றின் அதிகப்படியான எடை மற்றும் உயரம் காரணமாக இது ஒரு நாளைக்கு குறைந்தபட்ச உணவாக 150 கிலோ அளவிற்கு உண்ணுகின்றது. இவற்றின் மிகப்பெரிய பலம் என்றால் அவற்றின் துதிக்கை தான்.
மேலும் இவற்றின் தசை மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதால் இவற்றால் 7000 கிலோ – 8000 கிலோ வரைக்கும் உள்ள பொருளை சுமக்க முடியும். ஒரு ஆண் சிங்கம் குறைந்தபட்சம் 250 கிலோ வரைக்கும் தான் எடை இருக்கும் அதனால் தான் சிங்கத்தை இந்த யானைகள் வென்று விடும்.
2. நீர்யானை :
நமது லிஸ்ட்டில் இரண்டவதாக இருப்பது நீர்யானை தான். இந்த நீர்யானைகளை பொறுத்தவரையில் இவை வாழக்கூடிய எல்லைக்குள் மனிதன் அல்லது மற்ற விலங்குகள் வந்தால் அவற்றை இவை மிகவும் கொடூரமாக தாக்கும்.
நீர்யானைகளை சிங்கத்தால் வேட்டையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. காரணம் இதன் கொடூரமாக தாக்கக்கூடிய திறன் மற்றும் இதனுடைய எடைதான். பொதுவாக இந்த நீர்யானைகள் 1500 கிலோ -1800 கிலோ வரைக்கும் எடையுடன் இருக்கும். அதனால் தான் சிங்கத்தை நீர்யானைகள் வென்றுவிடும்.
3. காண்டாமிருகம் (Rhinoceros) :
அடுத்து நமது லிஸ்ட்டில் மூன்றாவதாக உள்ளது காண்டாமிருகம் தான். இதன் முக்கியமான பலம் என்றால் அவற்றின் எடை மற்றும் தாக்கும் திறனும் தான். ஒரு வளர்ந்த காண்டாமிருகம் 1400 கிலோ வரைக்கும் எடை கொண்டதாக இருக்கும். இந்த எடை ஒரு ஆண் சிங்கத்தை ஒப்பிடும் பொழுது 6 மடங்கு அதிகமாக இருக்கும்.
பொதுவா காண்டாமிருகம் தனது 1/2 அடி நீளமுள்ள கொம்புகளை வைத்து தனது எதிரிகளை குத்திக்கிழித்து கொன்றுவிடும். அதனால் இவை சிங்கத்தை எளிதில் வென்றுவிடும்.
ஓட்டகம் பற்றிய சில அற்புதமான தகவல்கள்
4. ஒட்டகச்சிவிங்கி:
நமது லிஸ்ட்டில் நான்காவதாக இருப்பது ஒட்டகங்கள் தான். ஒட்டகங்கள் பார்க்கத்தான் சாதுவாக இருப்பது போல் இருக்கும் ஆனால் சண்டை அல்லது தனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் இவற்றின் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கும்.
ஒட்டகங்களிடம் உள்ள இரண்டு முக்கியமான விஷயங்கள் தான் இவற்றை மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்து இவற்றை காப்பாற்றுகிறது அவை என்னவென்றால் ஒன்று இவற்றின் உடல் வடிவமைப்பு 18 அடி நீளம் வரைக்கும் வளரும். மேலும் 1300 கிலோவரைக்கும் உடல் எடையை கொண்டிருக்கும்.
இரண்டாவதாக இவற்றின் தாக்குதல் திறன். இந்த இரண்டு முறைகளில் தாக்குதல் நடத்தும் ஒன்று இவற்றின் பின்னங்கால்களை வைத்து நன்கு வேகமாக உதைத்து தாக்கும்.
மற்றொரு முறை இவற்றின் கழுத்தினை நன்கு சுழற்றி தாக்கும். அதனால் சிங்கங்கள் இவற்றை எளிதில் வென்றுவிட முடியாது.
5. புலி:
நமது லிஸ்ட்டில் ஐந்தாவதாக இருப்பது புலிகள் தான். பொதுவாக சிங்கத்தை விட 2 மடங்கு எடை அதிகமாக உடையவையே இந்த புலிகள் ஆகும். அதுமட்டுமில்லாமல் இவை மிகவும் கொடூரமாக தாக்கக் கூடியவை.
மேலும் சிங்கத்தை விட நன்றாக தாக்கக்கூடிய திறன் மற்றும் உடல் வலிமையை இந்த புலிகள் கொண்டிருப்பதால். இவற்றை சிங்கங்கள் எளிதில் வென்றுவிட முடியாது.
6. கேப் எருமை (Cape Buffalo) :
நமது லிஸ்ட்டில் ஆறாவது இடத்தில் உள்ளது கேப் எருமைகள் தான். இவற்றை ஆப்ரிக்கன் எருமைகள் என்றும் கூறலாம். ஒரு நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் எருமை 900 கிலோ வரைக்கும் எடை கொண்டதாக இருக்கும். இந்த எடை சிங்கத்தை விட 4 மடங்கு அதிக எடையை கொண்டிருக்கும்.
மேலும் இவற்றின் கொம்புகள் தான் இவற்றின் மிகப்பெரிய பலம் ஆகும். இவைகள் இவற்றின் கொம்புகளை வைத்து நன்கு வேகமாக தாக்கியது என்றால் சிங்கத்தால் உயிர் பிழைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
மேலே கூறிய 6 விலங்குகளே சிங்கத்தையே வென்றுவிடும் திறனும், பலமும் கொண்டிருப்பவை.
வெள்ளை முகம் கொண்ட கபுச்சின் குரங்கு பற்றிய தகவல்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |