ஆடம்பரம் வேறு சொல்

Advertisement

ஆடம்பரம் வேறு சொல்

நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கின்றது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உடையதாக இருக்கின்றது. இந்த அர்த்தங்கள் அனைத்தும் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. ஏனென்றால் ஒரு வார்த்தைக்கான ஒரு அர்த்தம் மட்டும் தெரியும். அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது.தமிழ் மொழியை பொறுத்தவரை நாம் பேசும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் மாறும்.

அது போல ஒரு வார்த்தைக்கே பல சொற்கள் இருக்கின்றது. அதனை பதறி நம்முடைய பதிவில் தினந்தோறும் பார்த்துவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆடம்பரம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 ஆடம்பரம் என்றால் என்ன.?

இன்றைய காலத்தில் பலரும் தன்னிடம் பணம் உள்ளது என்பதை மற்றவர்களிடம் தெரியப்படுத்துவதற்கே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் உயர்தர பொருட்களை வாங்குகின்றார்கள்.

மேலும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை கூட பெரும் விமர்சையாக கொண்டாடுவார்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை விமர்சையாக கொண்டாடுவார்கள். மேலும் மற்றவருக்கு நாம் வசதியாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பரமாக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரமாக வாழ தொடங்கினால் உங்களுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் மற்றவருக்காக என்று நீங்கள் உங்கள் சக்திக்கு மீறிய செயல்களை செய்யும் போது நீங்கள் நஷ்டத்திற்கு ஆளாகுவீர்கள்.

ஒருவரிடம் வசதி இருக்கிறது என்றால் தனது இஷ்டத்துக்கு செலவு செய்ய கூடாது. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பணமானது இன்று வரும், நாளை போகும் நிலையில்லாத ஒன்றாக இருக்கிறது. அதனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.

அது போல உண்மையாகவே பணம் உள்ளவன் இல்லாத ஏழை எளியோர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஆடம்பரம் வேறு பெயர்கள் | பகட்டு வேறு சொல்

ஆடம்பரம் என்பதை பல சொற்களால் அழைக்கலாம், அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

  • பகட்டு
  • வீண் செலவு
  • விமர்சை
  • படோடாம்

ஆடம்பரம் எடுத்துக்காட்டு:

கல்யாணத்திற்கு வருவதற்கு நகையை ஆடம்பரமாக வைத்திருந்தால் தான் மதிக்கிறார்கள்.

நான் கூப்பிடுகிறேன் என்னவென்றே கேட்காமல் ஆடம்பரமாக செல்கிறாள்.

அவ வீட்டில ஒன்னும் இல்லை ஆனால் வெளியில ஆடம்பரத்துக்கு ஒன்றும் குறைவில்லை.

 

ஆடம்பரம் எதிர்ச்சொல்:

ஆடம்பரம் என்பதற்கான  எதிர்ச்சொல் பற்றி அறிந்து கொள்வோம்.

  • எளிமை
  • இயல்பு
  • அடக்கம்
தொடர்புடைய பதிவுகள் 
அதிகாலை என்பதன் வேறு சொல் என்ன..?
நகரம் வேறு பெயர்கள்
வீரன் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement