வக்கீல் மற்றும் லாயர் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா..?

Advocate vs Lawyer Difference in Tamil

அனைவருக்கும் கோர்ட் என்றால் என்ன என்பது தெரியும்..! அங்கு நாம் செல்கிறோம் என்றால் அங்கு நம்மை சார்ந்த ஏதோ ஒரு வழக்கு இருக்கும் அல்லது தெரிந்தவர்களுக்காக நீதிமன்றத்திற்கு செல்வோம் அல்லது நிலம் சார்ந்த கேள்விகளுக்கான பதிலோ அல்லது அவர்களின் கையெழுத்து என்று வக்கீல்களிடமும் செல்வோம்..!

ஆனால் அங்கு வக்கீல்கள் இருப்பார்கள் என்று தெரியும். சிலர் அவர்களை லாயர் என்றும் சொல்வார்கள்..! ஆனால் இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இன்றைய பதிவில் வக்கிலுக்கும், லாயருக்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Advocate vs Lawyer Difference in Tamil:

லாயர் என்றால் என்ன..?

லாயர் என்பவர் சட்ட படிப்பு படித்து இருப்பார்கள் அதாவது BL பட்டம் பெற்றவர்கள். அவரை தான் நாம் லாயர் என்று சொல்கிறோம்.

 அதுவே Law படித்து முடித்துவிட்டு தமிழ்நாடு பார் கவுன்சில் அதாவது வழக்கறிஞர் சபை என்று சொல்வார்கள். அந்த கவுன்சில் பதிவு செய்துவிட்டு ஒரு வழக்கை எடுத்து மூன்றாவது நபர் சார்பாக வாதாடுபவர்களை Advocate என்றும் தமிழில் வழக்குரைஞர் என்பார்கள். அதாவது அந்த வழக்கை எடுத்துரைப்பவர்.    நீங்கள் நினைக்கலாம் அப்பறம் ஏன் லாயர் என்று சொல்கிறார்கள். அது ஆங்கில மொழி சொல், லாயர்க்கு தமிழில் வழக்கறிஞர் என்பார்கள். அதாவது ஒரு வழக்கு அல்லது சட்டம் பற்றி அறிந்தவர் என்று அர்த்தம்.  

 advocate vs lawyer difference in tamil

ஆனால் நாம் பேச்சு வழக்கில் Advocate, Lawyer வழக்கறிஞர் என்று அனைத்திற்கும் ஒரு அர்த்தம் என்று நினைத்து சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

மறுபடியும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் Advocate என்பவர் சட்டம் அறிந்து தமிழ்நாடு பார் கவுன்சில் பதிவு செய்து கோர்ட்டில் வழக்குகளை நடத்தி வருபவர். Lawyer என்பவர் சட்டம் படித்தவர்கள் ஆவார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  உங்கள் மீது குற்றம் சாட்டினால் நீங்களே வாதாட முடியுமா..? இது என்ன புதுசா இருக்கு..!

 

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law