இணைப்பு சந்தைப்படுத்தல் என்றால் என்ன தெரியுமா?

Advertisement

இணைப்பு சந்தைப்படுத்தல் | Affiliate Marketing Meaning in Tamil       

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் இணைப்பு சந்தைப்படுத்தல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். அதாவது Affiliate Marketing என்பது online மூலம் பணம்  சம்பாதிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று.   இந்த Affiliate Marketing  பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் எந்த ஒரு நிறுவனத்தையுடைய பொருளை (Products) உங்களின் வழியாக மற்றவரிடம் விற்பது. அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு பங்கு தருவது தான்  Affiliate மார்க்கெட்டிங். Affiliate Marketing என்பது கமிஷன் அடிப்படையில் இயங்குவது ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு Mobile Phone வாங்க இருக்கிறீர்கள் என்று எடுத்து கொள்வோம். அப்பொழுது நீங்கள் அந்த மொபைல் போன் பற்றி Youtube மூலமாக எப்படி இருக்கிறது என்று Review பார்ப்பீர்கள் அல்லவா! நீங்கள் நன்கு பார்த்திருப்பீர்கள் அந்த Youtube வீடியோவில் இந்த மொபைல் போன் வாங்க வேண்டும் என்றால் Description Box-இல் லிங்க் கொடுத்துளோம் அதை கிளிக் செய்து வாங்கி கொள்ளவும் என்று சொல்லுவார்கள். அந்த லிங்க்-யை கிளிக் செய்து வாங்குவதால் அந்த Youtube நடத்தும் நபருக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.  அதுவே Affiliate மார்க்கெட்டிங் என்று பொருள்.  மேலும் Affiliate Marketing என்றால் என்னவென்று தெளிவாக பார்க்கலாம் வாங்க.

ஆன்லைனில் Affiliate Marketing மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

இணைப்பு சந்தைப்படுத்தல் என்றால் என்ன | What is Affiliate Market in Tamil 

Affiliate  மார்க்கெட்டில் நான்கு தரப்பினர்கள்  ஈடுபட்டிருக்கிறார்கள் அதாவது இணை நிறுவனம், வணிகர், நுகர்வோர் மற்றும் இணைந்த நெட்வொர்க் ஆகியோர் கலந்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த Amazon , Flipkart, Meesho, Shopsy, Godaddy,  போன்ற பல ஆன்லைன் நிறுவனங்கள்  இந்த Affiliate மார்க்கெட்டிங் மூலம் பயனாளரை கொண்டு அவர்களது பொருளை இலவசமாக மார்க்கெட்டிங் செய்வதால் அந்த நிறுவனத்திற்கு Advertising Cost கம்மியாகிறது. அமேசான் இந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமானத்திற்கு Affiliate மார்க்கெட்டிங் ஒரு காரணம். 

இதன் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு Affiliate தொடர்பாளராக இணைந்து கொண்டால் அவர்களுக்கு ஒரு ID -யும் தரப்படுகிறது.

அந்த ஐடி அல்லது அவர்களுக்கு என்று தனியாக கூப்பன் code create வைத்து மற்றவர்களுக்கு share செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

Affiliate marketing  -யில் நீங்கள் வேறொருவருடைய தயாரிப்பை நீங்கள் கமிஷனுக்காக அதை விற்பனையும் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு பங்குகளும் கிடைக்கும்.

அதாவது 20 ரூபாய் முதல் 30,000 (approx) ரூபாய் வரை உங்களுக்கு பங்குகளும் கிடைக்கும். இவற்றின் மதிப்பானது நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பொறுத்து கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக: நீங்கள் ஒரு பொருளை விற்கும் பொழுது 20 ரூபாய் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். அதே பொருளை நீங்கள்  10 பேருக்கு Social மீடியா அல்லது வேறு வடிவில் மற்றவர்களுக்கு விற்கும் பொழுது 200 ரூபாய் வரை கிடைக்கும். அதுவே அளவு பொருளை பொருத்தும் விலை மாறும் பொழுது அதிக லாபம் கிடைக்கும். இதுவே உங்களுக்கு கிடைக்க கூடிய பங்கு (கமிஷன்) ஆகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement