அமலாக்கத்துறை என்றால் என்ன.? | Amalaka Thurai Enral Enna Tamil

Advertisement

Amalaka Thurai Enral Enna Tamil

அமலாக்க துறை என்ற வார்த்தையை அனைவரும் கேட்டிருப்போம். தினமும் செய்திகளில் அமலாக்கத்துறை என்ற வார்த்தையா உச்சரிக்காமல் இருக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் அமலாக்கத்துறையா.. அப்படி என்றால் என்ன யோசித்து கொண்டிருப்போம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அமலாக்கத்துறை என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அமலாக்க துறை அமலாக்க இயக்குநரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்துறை 1956 ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. அமலாக்க துறை இரண்டு நிதி சட்டங்களை செயல்படுத்துவதற்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, இதனை பற்றிய மேலும் விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அமலாக்கத்துறை என்றால் என்ன.?

அமலாக்கத்துறை என்றால் என்ன

அமலாக்க துறை என்பது பொருளாதார குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முறையாகும்.

இதனை ஆங்கிலத்தில் Enforcement Department என்று கூறுவார்கள்.

அமலாக்கத்துறை துறை என்பது, இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம் 2002 (PMLA) மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (FEMA) போன்ற பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உருவாக்கப்பட்ட துறையாகும்.

இந்த அமலாக்க பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.

குண்டர் சட்டம் என்றால் என்ன

அமலாக்கத்துறையின் பணிகள்:

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (FEMA), மற்றும் கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்தவும் கணக்கில் வராத கருப்பு பணத்தை ஒழிப்பதே இதன் பணியாகும்.

உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், பொருளாதார குற்ற வழக்கில் தொடர்வுடையவர்கள் இடங்களில் சோதனை செய்து அதில் கணக்கில் வராத சொத்துக்களை முடக்கி வைப்பதும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதும் இதன் வேலையாகும்.

லஞ்சம், கணக்கில் வராத சொத்துக்கள், பணம் ஆகியவற்றை கண்டறிந்து விசாரணை செய்து வருவது இதன் முதன்மையான வேலை ஆகும். அமலாக்கத்துறையினர் இந்தியா முழுவதும் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

விசா என்றால் என்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement