Anbalippu Veru Sol | அன்பளிப்பு வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்பளிப்பு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும், அதனை குறிக்கும் பல்வேறு வேறு சொற்களும் இருக்கும். ஆனால், நம்மில் பலருக்கும் வேறு சொற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துக்கொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
அன்பளிப்பு என்றால் என்ன.? என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அன்பளிப்பு என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக, இப்பதிவில் அன்பளிப்பு என்றா என்ன.? அதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்ன என்பதை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்து கொள்ளலாம்.
அன்பளிப்பு என்றால் என்ன.?
அன்பளிப்பு என்பது, அனைவராலும் பயன்படுத்தப்படும் வழக்கத்தில் உள்ள தமிழ் சொல் ஆகும். அன்பின் அடையாளமாக ஒருவர் மற்றொவருக்கு தரப்படும் பொருள் ஆகும். இதனை ஆங்கிலத்தில் Gift என்று கூறுவோம். அன்பளிப்பு என்றால் அன்பை வழங்குவதாக பொருள் அல்லது அன்பினால் வழங்கப்படும் பொருள் ஆகும்.
ஒருவர் மீது நாம் அளவற்ற அன்பு வைத்திருந்தால் அவர்களுக்கு நாம் அன்பளிப்பு கொடுப்போம். அதேபோல், திருமணம், பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்போம். அந்த அன்பளிப்பு பணமாகவோ, பொருளாகவோ அல்லது உணவாகவோ இருக்கலாம்.
இன்று உள்ள தமிழர்களின் பழக்கத்தில், வீட்டிற்கு விருந்துக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறாக அன்பளிப்பு என்பது, பல்வேறு முறைகளில் வழங்கப்படுகிறது.
உறுதிமொழி என்பதன் வேறு சொல் என்ன.?
அன்பளிப்பு என்பதன் வேறு சொல்:
- நன்கொடை
- பரிசு
- வெகுமதி
- தானம்
- இனாம்
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் அன்பளிப்பு என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.
அன்பளிப்பு எடுத்துக்காட்டு வாக்கியம்:
- என் ஆசிரியர், என் பிறந்தநாளுக்கு அன்பளிப்பாக ஒரு புத்தகம் கொடுத்தார்.
- சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பு கொடுப்பது சிறந்த பழக்கம்.
- அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் தமிழர்களிடையே வளர்ந்து வருகிறது.
- அன்பான நபர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது மனதிற்கு திருப்தி அளிக்கும்.
தைரியம் என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |