ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன? | Angiogram in Tamil

Advertisement

ஆஞ்சியோ அறுவை சிகிச்சை – Angeo Heart Procedure in Tamil

Angiogram in Tamil – வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். அதாவது ஆஞ்சியோகிராம் என்பது என்ன? ஆஞ்சியோகிராம் எதற்கு உதவுகிறது, ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை முறையா அல்லது சிகிச்சை முறையா? இது போன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை முறை பற்றி மக்களிடம் நிறைய விதமான குழப்பங்கள் இருந்து வருகிறது. ஆகவே ஆஞ்சியோ சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?

Angiogram in Tamil – ஆஞ்சியோகிராம் என்பது லேட் சவண்டிக்கு மேல் டெவலப்பான ஒரு டெக்னாலஜி ஆகும். இந்த டெக்னாலஜி பயன்படுத்தி என்ன செய்வார்கள் என்றால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லக்கூடிய தமனியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை கண்டுபிடிக்க மிகவும் பயன்படக்கூடிய ஒரு பரிசோதனை முறை என்று சொல்லலாம். இந்த பரிசோதனை செய்யும்பொழுது பாதிக்கபட்டக்கார்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கும்பட்சத்தில் அந்த பிரச்சனையை மருத்துவர்கள் அப்போவே சரி செய்துவிடுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்யும் முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி என்று பெயர்.

பொதுவாக இதயத்தில் ஒருவருக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் முதல் இசிஜி எடுத்து முதலில் பார்ப்பார்கள், இதைய அடைப்பு நோய் வந்தமாதிரி இருக்கும் போது மருத்துவர்கள் அடுத்து செய்யும் சிகிச்சை முறை எதுவென்றால் ஆஞ்சியோ என்று சொல்லலாம். இந்த ஆஞ்சியோ சிகிச்சை முறை செய்வத்திற்கு முன் இன்னும் நிறைய ஸ்டேஜ் இருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவியாக இதயத்தில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு Thrombolysis என்கிற Injection தருவார்கள். இருப்பினும் ஒருசில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நெறியடியாகவே ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.

ஆஞ்சியோ செய்வதற்க்கான காரணங்கள்:

  • நெஞ்சு வலி போன்ற இதயத் தமனி நோயின் அறிகுறிகள்.
  • பிற பரிசோதனைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் மார்பு, தாடை, கழுத்து அல்லது கைகள் ஆகியவற்றில் வலி காணப்படுதல்.
  • புதிய அல்லது அதிகமான மார்பு வலி.
  •  பிறவி இதய நோய்
  • வெட்டுக்கள் இல்லாமல் இதய அழுத்த பரிசோதனையில் கிடைக்கும் அசாதாரண முடிவுகள்
  • பிற இரத்த நாள பிரச்சனைகள் அல்லது மார்புக் காயம்
  • அறுவை சிகிச்சை தேவைப்படும் இதய வால்வுப் பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை அளிக்க எவ்வளவு நேரம் ஆகும்:

ஒவ்வொரு நோயாளியின் நிலைமையும் வெவ்வேறானது, மேலும் சிகிச்சை எவ்வளவு சிக்கலானது அல்லது எவ்வளவு நேரடியானது என்பதைக் கணிப்பது எப்போதும் எளிதானதல்ல. சிகிச்சை செய்யப்படும் இடத்தைப் பொறுத்து, உதாரணமாக, காலில் ஒரு பெரிய தமனியைப் பயன்படுத்தினால், இதைச் செய்ய 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை எடுக்கலாம், சிறிய தமனிகளைப் பயன்படுத்தினால், இது மிகவும் சிக்கலானதாகவும் அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஒரு வழிகாட்டியாக எக்ஸ்ரே அறையில் மொத்தம் இரண்டு மணிநேரம் இருக்க வேண்டும், சராசரி ஃப்ளோரோ நேரம் 10 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கிறது.

எக்கோ டெஸ்ட் என்றால் என்ன?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement