Arasargaluku Veesapadum Visiri In Tamil
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அரசர்களுக்கு வீசப்படும் விசிறி என்றால் என்ன என்பதையும் அதன் வேறு சொல் பற்றியும் தான் பார்க்கப்போகிறோம். அரசர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு இரண்டு நபர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் அரசர்க்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவார்கள். அதேபோல் அவர்கள் அரசர்க்கு வீசப்படும் விசிறிக்கும் வேறு பெயர்கள் இருக்கின்றன.
நாம் அவற்றை விசிறி என்று தான் அழைத்து வருகிறோம் ஆனால் அந்த காலத்தில் விசிறிக்கு வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன. அந்த பெயர்கள் எல்லாம் இப்போது பயன்படுத்துவதே இல்லை என்றாலும் அதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் தெரிந்து கொண்ட சொற்களை உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி கொடுங்கள். இப்போது அரசர்களுக்கு வீசப்படும் விசிறிக்காண வேறு சொற்களை பார்க்கலாம் வாருங்கள்.
அரசர்களுக்கு வீசப்படும் விசிறி என்றால் என்ன?
அரசர்களுக்கு வீசப்படும் விசிறி சாமரம் அல்லது சவுரி எனப்படும். இது மரியாதைப் பொருளாக வீசப்படுகிறது. அரசர்களுக்கு மட்டும் இல்லாமல் தெய்வங்களுக்கும் சாமரம் வீசப்படுகிறது.
சாமரம் என்பது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்பட்டது. ஈ முதலானவற்றை விரட்டவும், இதமான சூழலை ஏற்படுத்தவும் சாமரம் வீசப்படுகிறது.
மேலும் பெண்கள் அரசனுக்கு வெண்சாமரம் வீசுவார்கள். தெய்வ வழிபாட்டிலும் வெண்சாமரம் வீசப்படுகிறது. வெண்சாமரமானது கவரிமான்களின் ரோமங்களால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. எட்டு திசை களிலும் பரவச் செய்வதற்காகவே வெண்சாமரம் வீசப்படுகிறது.
அரசர்களுக்கு வீசப்படும் விசிறியின் வேறு சொல் சாமரம், வெண்சாமரம், சவுரி ஆகும்.
இந்த காலத்தில் அனைவரும் மின்விசிறி பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் யாரும் சாமரம் பயன்படுத்துவது இல்லை. விசிறி என்பது, காற்றை நகர்த்தும் இயந்திர சாதனமாக மாறியுள்ளது. இது, மனித வசதி மற்றும் பாதுகாப்பு, சில தொழில்துறை செயல்முறைகளுக்கு அவசியமாக கருதப்படுகிறது.
விசிறி in English:
- Fan
எடுத்துக்காட்டு:
- பனை ஓலை விசிறிகளால் குளிர்ந்து வராண்டாவில் அமர்ந்தோம்.
- முழு வீட்டு விசிறி ஒரு வாழும் இடம் முழுவதும் காற்றைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
- ஈக்களை விரட்ட நான் விசிறியை பயன்படுத்தினேன்.
- என் வீட்டில் மின்விசிறி புதிதாக வாங்கியுள்ளோம்.
- என் நண்பன் வீட்டில் மின்விசிறி பழுதாகி விட்டது.
- இந்த விசிறி உடைந்து விட்டது.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |