நாடித்துடிப்பு
ஒரு மனிதனுக்கு நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு மற்றும் மூச்சு விடுதல் இதுபோன்ற செயல்கள் அனைத்தும் இயல்பாக நடைபெறும் ஒரு செயல்முறை ஆகும். இதுபோன்ற செயல்முறைகளில் ஏதாவது ஒன்று சரியாக இயங்கவில்லை என்றாலும் நாம் ஆரோக்கியமாக வாழவே முடியாது. அதுபோல நமது கையில் துடிக்கும் நாடி துடிப்பை வைத்து நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்களிலும் சொல்ல முடியும் என்று கூறுவார்கள். அப்படி துடிக்கும் நாடிப்பில் ஒரு மனிதனுடைய சராசரி நாடித்துடிப்பு எத்தனை முறை துடிக்கும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..? |
ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு எத்தனை முறை:
ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பு எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு நாடித்துடிப்பும் முக்கியமான ஒன்று. இந்த நாடித்துடிப்பை நமது கைகளில் மட்டும் தான் உணர முடியும்.
ஒரு மனிதனுடைய சராசரி நாடித்துடிப்பு என்றால் 72 முறை துடிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாடித்துடிப்பு என்பது நமது உடலின் தற்போதைய நிலைமையை பொருத்தும் வேறுபடுகிறது. அதாவது சிறிய வயது குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை நாடித்துடிப்பும், அதற்கு அடுத்த நிலை வயதில் உள்ளவர்களுக்கு 70 முதல் 80 வரையிலான நாடித்துடிப்பும், கர்ப்பிணி பெண்களுக்கு நிமிடத்திற்கு 150 முறை நாடிதுடிப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
நாடித்துடிப்பு அதிகரிக்க காரணம்:
நாம் ஆரோக்கியமாக வாழவில்லை என்றால் அதனை நமது நாடித்துடிப்பை வைத்து அறிந்துக்கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய உடல் நலத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் நாடிதுடிப்பு வழக்கமாக இருப்பதை விட அதிகமாக காணப்படும்.
- அதிக உடல் எடை
- உயர் இரத்த அழுத்தம்
- உடலில் அதிக அளவு கொழுப்பு
- மன அழுத்தம்
மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகள் நமது உடலில் காணப்பட்டால் நாடிதுடிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன..? |
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |