BBA படித்தால் என்ன வேலை | BBA Course Details in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் BBA படிப்பதால் என்ன நன்மைகள் மற்றும் எந்தெந்த வேலைக்கு செல்லலாம் என்பதை பற்றி காணப்போகிறோம். 12th முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் யோசித்து கொண்டிருப்பீர்கள். வீட்டிற்க்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் மாணவனை பார்த்து கேட்பார்கள். 12th முடித்துவிட்டாய் அடுத்து என்ன படிக்க போற என்று கேட்பார்கள். அவர்களும் அடுத்து படிப்பதற்கு அறிவுரை சொல்வார்கள். 12th படித்துவிட்டு என்ன செய்வது மற்றும் BBA படித்துவிட்டு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தால் இது உங்களுக்கான பதிவு தான் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்? |
BBA படிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
BBA பட்டதாரிகளுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக BBA பட்டதாரிகள் மேலாண்மை பயிற்சி பெற்ற நிறுவனங்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்தவர்களாக இருக்கலாம். BBA முடித்துருந்து சில மாதங்கள் பணி அனுபவம் இருந்தாலே போதும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல மதிப்பு மிக்க இடத்திற்கு செல்லலாம். இந்த துறையில் ஆரம்ப சம்பளமாக Rs.12,000 – Rs.18,000 வரை வழங்கப்படும். இருந்தாலும் இந்த துறையில் உங்களின் மதிப்பு திறமையை பொறுத்து இருக்கும்.
BBA Course Jobs List in Tamil:
BBA படித்தவுடன் அடுத்து எந்த வேலைக்கு செல்வது என்பதை பற்றி நினைப்பீர்கள். எல்லாரும் படிப்பு சம்மந்தமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுபோல BBA படிப்புக்கும் சம்மந்தப்பட்ட துறைகளை பற்றி பார்ப்போம்.
- தொழில்முனைவு
- நிதி மற்றும் கணக்கியல் மேலாண்மை
- மனித வள மேலாண்மை
- சந்தைப்படுத்தல் மேலாண்மை
- விநியோக சங்கிலி மேலாண்மை
- சுற்றுலா மேலாண்மை
BBA படித்தவுடன் உயர்படிப்பு என்ன செய்வது:
இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவுடன் என்ன செய்வது குழப்பம் அடைவீர்கள். அடுத்து படிக்க செல்வதும், வேலைக்கு செல்வதும் உங்களின் ஆர்வம் மற்றும் திறமையை பொறுத்தது. நீங்கள் அடுத்து என்ன செய்வது என்பதற்கு சில ஆலோசனைகளை சொல்கிறோம்.
MBA Course Details in Tamil:
MBA படிப்பின் காலம் இரண்டு ஆண்டுகள். நீங்கள் சிறந்த கல்லூரிகளில் படிக்க விரும்பினால் CAT, XAT, SNAP மற்றும் MAHCET போன்ற நுழைவு தேர்வுகள் இருக்கும். அதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். MBA படிப்பு மரியாதையும், மதிப்பையும் தரும். ஒரு நிர்வாகத்தில் வேலைக்கு சென்றால் நிர்வாக பொறுப்பு மற்றும் அதிகமான சம்பளத்தையும் தர கூடியது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் முதலாளியாகவும் தொழில் தொடங்கலாம்.
MBA படித்த பிறகு நீங்கள் தொழில்கள், சுகாதார பாதுகாப்பு, உற்பத்தி, அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் தேடி வேலையை பெற முடியும்.
BBA படித்தவுடன் தனியார் துறை வேலைவாய்ப்புகள்:
தனியார் துறை நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதில் உங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும். அதை நீங்கள் திறமையாகவும், புத்தி கூர்மையுடன் கையாள வேண்டும். MBA படித்தவுடன் நீங்கள் எந்த மாதிரியான தொழில்கள் செய்யலாம் என்று பார்ப்போம்.
- விளம்பரம்
- விமான போக்குவரத்து
- வங்கி
- ஆலோசனை
- டிஜிட்டல் சந்தைப்படுத்தல்
- பொழுதுபோக்கு
- நிதி
- தகவல் தொழில்நுட்பம்
- காப்பீடு
- மீடியா
- ஆஃப்லைன் சந்தைப்படுத்தல்
- உற்பத்தி
BBA படித்தவுடன் அரசு வேலைவாய்ப்புகள்:
அரசு வேலை பொறுத்தவரை வேலை அழுத்தம் குறைவாக இருக்கும். கணக்கியல் மற்றும் நிதி நிறுவனங்கள் வேலைக்கு அரசு BBA பட்டதாரிகளை தான் தேர்ந்தெடுக்கும். நீங்கள் பிரச்சனைகளை முடிப்பதிலும், நிர்வகிப்பதில் திறமையானவர்கள் என்றால் அரசு வேலைக்கு முயற்சிக்கலாம்.
நீங்கள் BBA படித்தால் என்னென்ன நன்மைகள் என்று படித்து தெரிந்து கொண்டீர்களா. நீங்கள் படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |