பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள் | BCA Course Details in Tamil

BCA Course Details in Tamil

பிசிஏ படிப்பு விவரங்கள் | BCA Course Details in Tamil

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் BCA படிப்பதால் என்ன நன்மைகள் மற்றும் எந்தெந்த வேலைக்கு செல்லலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் அடுத்து என்ன படிக்க போற, எந்த காலேஜ் சேர போற போன்ற பல கேள்விகளை கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சில மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த துறையை சொல்வார்கள், அதையும் பெரியவர்கள் கேட்டு விட்டு அந்த துறைக்கான தகவல்களை கூறுவார்கள். அந்த வகையில் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு BCA படிப்பதற்கு ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் இந்த தொகுப்பில் BCA படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பல தகவல்களை படித்தறியலாம் வாங்க.

BCA Course Details in Tamil:

  • BCA என்பதன் விரிவாக்கம் Bachelor Of Computer Applications என்பதாகும். இந்த துறையில் படிப்பதால் பல துறைகளில் வேலைவாய்ப்பை பெறலாம். இது மூன்று வருட படிப்பு. இதில் 6 செமெஸ்டர் இருக்கும்.
  • App Development, Wepsite Development, கோடிங், ஜாவா ,cc++, IT துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் கணினியில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கோர்ஸ் படிக்கலாம்.

அடிப்படைத் தகுதிகள்:

  • BCA Course Details in Tamil: இந்த படிப்பை படிப்பதற்கு அறிவியல் துறையில் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. Commerce, Arts Students கூட இந்த துறையில் படிக்கலாம்.
  • சில கல்வி நிறுவனங்கள் நேரடியாக BCA இரண்டாவது ஆண்டிலிருந்து மாணவர்களை சேர்த்துக்கொள்வார்கள். இவர்களை ஆங்கிலத்தில் lateral entry மாணவர்கள் என்று அழைப்பார்கள்.
  • இவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கணினி சார்ந்த படிப்பை ஆறு மாதங்கள் படித்து முடித்திருப்பார்கள்.
  • அல்லது பத்தாம் வகுப்பு முடித்து State Board for Technical Education வழங்கும் IT துறை சார்ந்த டிப்ளோமாவை மூன்று ஆண்டுகள் பயின்று பின்னர் BCA இரண்டாம் ஆண்டில் சேர்வார்கள்.

படிப்புகள்:

  • இதில் உங்களுக்கு கணினி சம்பந்தப்பட்ட படிப்புகள் இருக்கும். அதாவது Database, Networking,Data structure,core programming languages,Software engineering,Object-oriented programming,Web scripting மற்றும் Development போன்றவற்றை கற்று கொடுப்பார்கள்.

மேற்படிப்பு:

  • BCA படித்து முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க நினைப்பவர்கள் MCA, MBA போன்ற பட்டப்படிப்புகளை படிக்கலாம்.

வேலைவாய்ப்புகள்:

  • இந்த துறையில் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களான Wibro, Infosys மற்றும் பல நிறுவனங்களில் Placements கிடைக்கும்.
  • software tester, junior programmer, system administrator, software developer போன்ற பணிகளில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
  • ஸ்டார்டிங் வருமானம் சற்று குறைவாக இருக்கும். பின்னர் உங்களுடைய Performance பொறுத்து வருமானம் அதிகமாகும்.

அரசு வேலைவாய்ப்புகள்:

  • இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்படை போன்ற அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • BCA படிப்பு பொறுத்தவரை நீங்கள் மனப்பாடம் செய்யாமல் நன்கு புரிந்து கொண்டு படியுங்கள்.
  • உங்களுடைய திறமையை வளர்த்து கொள்ளுங்கள் இது இந்த படிப்பிற்கு மட்டுமல்ல எந்த படிப்பு படித்தாலும் அதில் உங்களுடைய புரிதல் அவசியம்.
  • முக்கியமான ஒன்று மற்றவர்களின் அறிவுரையில் எந்த படிப்பையும் படிக்காதிர்கள், உங்களுக்கு எது படிக்க விருப்பமோ அந்த கோர்ஸ்-ஐ எடுத்து படியுங்கள்.
நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா.!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com