கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை காரணம் தெரியுமா..? 

ஹலோ நண்பர்களே… தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள்… அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது கருப்பு  எறும்புகள் ஏன் மனிதர்களை கடிப்பதில்லை… பொதுவாக கருப்பு எறும்புகள் மனிதர்களை கடிக்காது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா.? அப்படி சிந்திக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை.?

பொதுவாக எறும்புகள் என்றாலே அனைவருக்கும் பயமாக இருக்கும். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் எறும்பு கடித்தால் தாங்கிக்கொள்ள முடியாது. எறும்புகள் அளவில் மிகவும் சிறியது தான். இருந்தாலும் இந்த சிறிய எறும்பை கண்டு அவ்வளவு பெரிய யானை கூட பயப்படும் என்று சொல்வார்கள்.

எறும்புகள் நம்மை விட அளவில் 10,000 மடங்கு சிறிய உயிரினம் ஆகும். பூமியில் வாழும் மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவு எறும்புகள் வாழ்கிறது என்று விஞ்ஞான ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. எறும்புகள் டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே இருக்கின்றன. இந்த உலகில் 12,000 வகையான எறும்புகள் வாழ்கின்றன.

பொதுவாக அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய உயிரினம் எறும்பு. எறும்புகள் இல்லாத வீடுகளே இல்லை. மழைக்காலங்களில் பெரும்பாலும் நமது வீடுகளில் கருப்பு எறும்புகள் காணப்படுகின்றன. சில எறும்புகள் நம் மேல் ஏறினாலோ அல்லது அவைகள் செல்லும் இடத்தில் கால் வைத்தாலோ நம்மை கடிக்கும். ஆனால் என்ன தான் செய்தாலும் கருப்பு  எறும்புகள் மனிதர்களை கடித்ததில்லை.

இந்த கருப்பு  எறும்புகள் அதிகமாக காணப்படும் இடம் ஆப்பிரிக்கா. இந்த கருப்பு எறும்புகள் ஆப்பிரிக்காவில் இருந்து தான் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறார்கள். நம் பகுதிகளில் பெரும்பாலும் காணப்படக்கூடிய எறும்புகள் கட்டெறும்பு, சிற்றெறும்பு மற்றும் கருப்பு  எறும்பு. கருப்பு  எறும்புகளை தவிர மற்ற இரண்டு எறும்புகளும் கடிக்கக்கூடியவை.

கருப்பு எறும்பு ஏன் கடிப்பதில்லை காரணம் தெரியுமா..? 

கருப்பு எறும்புகள் ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று மக்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அப்படி கடிக்காத கருப்பு  எறும்புகளை பிள்ளையார் எறும்புகள் என்று சொல்வார்கள். சில மக்கள் கருப்பு  எறும்புக்கு கொடுக்கு இல்லை அதனால் தான் அது யாரையும் கடிப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அது காரணம் இல்லை.

ஆனால் அறிவியலின் படி காரணம் என்னவென்றால்  “கருப்பு எறும்பு பிறக்கும் போது இயற்கையாகவே அதற்கு வன்முறையை தூண்டும் எண்ணம் இல்லை என்று அறிவியல் ஆய்வுகளில் கூறப்படுகிறது. அதனால் தான் கருப்பு எறும்புகள் மனிதர்களை கடிப்பதில்லை”.  அதுமட்டுமில்லாமல்  சிற்றெறும்புகள் உணவிற்காக ஒரு உயிரினத்தை கொன்று சாப்பிடும். ஆனால் கருப்பு எறும்பு இறந்த உயிரினத்தை மட்டும் தான் சாப்பிடும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இருந்தாலும் கருப்பு  எறும்புக்கு கடிக்கும் தன்மை உண்டு. கருப்பு  எறும்பு கடித்தால் 4 கட்டெறும்பு கடித்த வலி ஏற்படும். மற்ற எறும்புகளை விட கருப்பு  எறும்புகள் தான் ஒற்றுமையாக வாழும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார்கள். கட்டெறும்பிடம் உள்ள விஷத்தை விட கருப்பு எறும்பு 10 மடங்கு விஷ தன்மையை கொண்டுள்ளது. இருந்தாலும் இந்த கருப்பு எறும்புகள் யாரையும் கடிப்பதில்லை…

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement