Blue Aadhar Card Details in Tamil
நண்பர்களே ஆதார் கார்டு அனைவரிடமும் இருக்கும். ஆனால் ஒரு சிலரிடம் புளு நிறத்தில் ஆதார் கார்டு இருக்கும். இது எத்தனை நபர்களுக்கு தெரியும்..! இந்த புளு நிற ஆதார் கார்டு யாருக்கு தருவார்கள். இதில் இருக்கும் ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
தற்போது இந்தியாவில் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை அனைத்து முக்கிய ஆவணங்களில் இணைக்க சொல்லி அரசு உத்தரவுவிட்டது. இந்த ஆதார் அட்டைக்கும் நீல நிற ஆதார் அட்டைக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம் வாங்க..!
Blue Aadhar Card Details in Tamil:
பிறந்த குழந்தைக்கும், 5 வயதிற்கு உள்ள குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை கிடையாது. 2018 ஆம் ஆண்டில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது குழந்தைகளின் ஆதார் அட்டை எனவும் அறிமுகம் செய்துள்ளார்கள். இது குழந்தைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட ஆதார் கார்டு ஆகும்.பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்
இரண்டு ஆதார் கார்டுக்கும் என்ன வித்தியாசம்:
நீல நிறத்தில் உள்ள அட்டை, பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் ஆதார் அட்டைக்கு சற்று வித்தியாசமானது ஆகும். இதில் பெரியவர்களுக்கு கைரேகை ஸ்கேன் செய்வது போல் நீல ஆதார் அட்டைக்கு தேவை இல்லை.
குழந்தையின் ஆதார் அட்டையை சரிபார்க்க, பெற்றோர்களில் ஒருவர் அவர்களின் அசல் ஆதார் அட்டை மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நீல நிற ஆதார் கார்டு குழந்தைக்கு 5 வயதிற்கு பிறகு அதனை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அப்படி அதனை அப்டேட் செய்யாமல் இருந்தால் அது செல்லாமல் போய்விடும். இந்த ஆதார் பயன்படுத்த எந்த ஒரு கட்டணமும் கிடையாது.
நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அருகிலுள்ள ஆதார் மையத்தை அவர்கள் சரிபார்க்கலாம். இதற்கு ஆன்லைன் வசதி இல்லை.
மத்திய அரசு அறிவிப்பு ஆதார் மற்றும் பான் இல்லாமல் சேமிப்பு கணக்கை திறக்க முடியாது
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |