B.Sc. Maths Course Details in Tamil..!
வணக்கம் இனிமையான நண்பர்களே… மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் கல்வி கற்றிருக்க வேண்டும். கல்வி என்பதை அழியா சொத்து என்றே கூறலாம். அனைவருமே கல்வி கற்க வேண்டும். +2 முடித்தவுடன் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். +2 முடித்து விட்டு விடுமுறையில் வீட்டிலில் இருப்பவர்களுக்கு, அடுத்து நாம் என்ன படிக்கலாம் என்ற யோசனை இருக்கும். உங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்றால், நீங்கள் கல்லூரியில் B.Sc. Maths Course படிக்க ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் பாருங்கள்—> பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள்
B.Sc Maths பற்றிய விவரங்கள்:
நீங்கள் +2 படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அடுத்து என்ன படிக்க போகிறீர்கள் என்று கேட்பார்கள்.
சிலர் இந்த Course எடுத்து படி, இந்த Course எடுத்து படிக்காதே என்று சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். மற்றவர்கள் சொல்லும் Course எடுத்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு என்ன படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அதை படியுங்கள்.
அந்த வகையில் கணிதம் உங்களுக்கு நன்றாக வரும் என்றால் நீங்கள் B.Sc Maths Course எடுத்து படிக்கலாம். இன்று நாம் B.Sc Maths Course படிப்பதால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் படித்தறியலாம் வாங்க.
B.Sc Maths Full Form in Tamil:
B.Sc என்பது Bachelor of Science என்றும், B.Sc Maths என்பது Bachelor of Science in Mathematics என்றும் சொல்லப்படுகிறது. B.Sc Maths என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும்.
நீங்கள் B.Sc Maths பட்டம் பெற்றவராக இருந்தால் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று கூறலாம். நீங்கள் கணிதத்தில் கைதேர்ந்தவராக இருந்தால் உங்களுக்கு இதில் வரும் பாடங்கள் சுலபமானதாக இருக்கும்.
பெரும்பாலான அறிவியல் கல்லூரிகளில் கணிதத்துறை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. உங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்றால் நீங்கள் B.Sc Maths Course எடுத்து படியுங்கள். இந்த B.Sc Maths Course -ல் உள்ள பாடங்களை இங்கு பார்ப்போம்.
B.Sc Maths Course Subjects in Tamil:
- Calculus
- Statistics
- Differential Equations
- Mechanics
- Abstract Algebra
- Linear Algebra
- Discrete Mathematics
- Numerical Method
- Complex Analysis
இந்த B.Sc Maths Course -ல் இதுபோன்ற பாடங்கள் இருக்கின்றன. இந்த பாடங்கள் கல்லூரிகளை பொறுத்து வேறுபடுகின்றன. அதுமட்டுமில்லாமல் இதனுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் 2 ஆண்டு வரை படிக்க வேண்டும்.
B.Sc Maths வேலைவாய்ப்புகள்:
- கணிதத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
- நீங்கள் கணிதத் துறையில் பட்டம் பெற்றவராக இருந்தால் அரசு மற்றும் தனியார் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் உண்டு.
- நீங்கள் கணித பட்டம் பெற்றவராக இருந்தால் வங்கித்துறை, ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ், பல்கலைக்கழகங்கள், அறிவியல் கழகங்கங்களில் போன்றவற்றில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- இதுபோன்ற வேலைகள் கிடைத்தால் நல்ல சம்பளம் பெறமுடியும்.
- மற்ற துறையினரை விட கணிதத்துறையில் உள்ளவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
மேற்படிப்பு:
இளநிலை கணிதப்பட்டம் பெற்ற பிறகு நீங்கள் மேற்படிப்பு படிக்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் நேரடியாக M.Sc Mathematics படிக்கலாம். இதனால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளும் உள்ளது.
கணித துறையில் பல முதுநிலை படிப்புகள் உள்ளன. அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
கணிதத்துறையில் உள்ள முதுநிலை படிப்புகள்:
- M.Sc Pure Mathematics
- M.Sc mathematical Economics
- M.Sc Applied Mathematics
- M.Sc Statistics
- M.Sc Mathematical Statistics
- M.Sc Financial Mathematics
- M.Sc Agricultural Statistics
- M.Sc Bio-statistics
குறிப்பு: எது படிப்பதாக இருந்தாலும் அதை உங்களின் விருப்பத்துடன் படியுங்கள். மற்றவர்களின் அறிவுரையின் படி படிப்பதில் எந்த பயனும் இல்லை.
நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா.!
மேலும் பலவிதமான கல்வி தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |