CBC என்பதன் விரிவாக்கம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள்

Advertisement

CBC Full Form in Medical Test | CBC Blood Test Meaning in Tamil

பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதேபோல், ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவாக்கம் (Full Form) என்பது இருக்கும். அதாவது, ஒரு பெரிய வார்த்தையை சுருக்கி சிறியதாக எழுதுவார்கள் மேலும், சுருக்கியே கூறுவார்கள். அவ்வாறு கூறும்போது நமக்கு தெரியாது. ஆகையால், நாம் அணைத்து வார்த்தைகளுக்கான விரிவாக்கம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் CBC என்பதன் விரிவாக்கமும் CBC Test என்றால் என்ன என்பதையும் தெரிந்த கொள்ளலாம் வாங்க.

CBC என்பதை மருத்துவமணையில் அதிகம் கேட்டு இருப்பீர்கள். அப்படி என்றால் என்ன என்று யோசித்து இருப்போம். CBC என்பதை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  ஆகையால், CBC என்பதற்கான விரிவாக்கம் மற்றும் அதனை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is CBC Test in Tamil:

CBC Full Form:

CBC என்பதன் விரிவாக்கம் Complete Blood Count ஆகும். இதனை தமிழில் முழுமையான இரத்த எண்ணிக்கை என்று கூறுவார்கள்.

What is CBC Test in Tamil

CBC Test Meaning in Tamil (Complete Blood Count Meaning in Tamil):

CBC Test என்பது இரத்தத்தினை பற்றிய சோதனை ஆகும். அதாவது, இரத்தத்தில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான அணுக்களை சோதனை செய்யும் முறையாகும். பொதுவாக இரத்த செல்களை Hemocytes என்று கூறுவோம். இதில், RBC, WBC, PLATELET மற்றும் PLASMA போன்ற செல்கள் இருக்கும்.  எனவே, RBC, WBC, PLATELET மற்றும் PLASMA செல்களை மிகவும் துல்லியமாக பார்க்கக்கூடிய சோதனை CBC Test ஆகும். 

CBC என்பது, முழுமையான இரத்த எண்ணிக்கை (Full Blood Count) அல்லது முழுமையான இரத்தப் படப் பரிசோதனை (Full Blood Picture) என்று நினைவில் கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை செய்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள செல்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

CBC டெஸ்ட் எடுப்பதால் என்ன பயன்.?

  • CBC டெஸ்ட் எடுப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள RBC என்று சொல்லக்கூடிய சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் WBC என்று சொல்லக்கூடிய இரத்த வெள்ளைஅணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் (PLT) போன்றவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.
  • முக்கியமாக நோய்த்தொற்றுகள், இரத்த சோகை, லுகேமியா போன்ற நோய்களை கண்டறிய உதவுகிறது.
  • மொத்தத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க இந்த CBC டெஸ்ட் பயன்படுகிறது. அதாவது, ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையின் அடிப்படையான முக்கிய பகுதியாக CBC டெஸ்ட் இருக்கிறது.
Related Posts👇
NIA Full Form in Tamil
NRI என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்
IPBMSG என்பதற்கான விரிவாக்கம் என்ன

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement