CBI Full Form in Tamil
இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. இதனை தான் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்று கூறுவார்கள். அதாவது, நாம் கற்று தெரிந்திருப்பது கையளவு தான்.. ஆனால் கற்காததது உலகளவில் இருக்கிறது. எனவே, நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்வது நம் ஒவ்வொருடைய கடமை. ஆகையால், உங்களுக்கும் பயனுள்ள வகையில் இப்பதிவில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறோம்.
அந்த வகையில் இப்பதிவில் CBI -யின் விரிவாக்கம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. விரிவாக்கம் என்பது ஒரு வார்த்தையின் சுருக்கத்தை விரித்து புரியும்படி கூறுவது ஆகும். அந்த வகையில் விரிவாக்கம் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What is The CBI Full Form in Tamil:
CBI என்பதன் விரிவாக்கம் Central Bureau of Investigation ஆகும். இதனை தமிழில் மத்தியப் புலனாய்வுத் துறை என்று கூறுவார்கள். CBI என்பது குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விஷயங்களை ஆராயும் இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும். இது, இந்திய அரசாங்கத்தின் நீதித்துறையின் கீழ் செயல்படுகிறது. இத்துறை, இரண்டாம் உலகப் போரின் போது கொள்முதலில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக 1941 ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு காவல் அமைப்பாக நிறுவப்பட்டது. இன்றுவரை ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் முதலான வழக்குகளில் நடுவண் புலனாய்வுச் செயலகம் விசாரணை செய்து வருகிறது.
CBI -யின் பிரிவுகள்:
- ஊழல் தடுப்பு பிரிவு
- பொருளாதார குற்றங்கள் பிரிவு
- சிறப்பு குற்றப்பிரிவு
- வழக்கு விசாரணை இயக்குநரகம்
- நிர்வாக பிரிவு
- கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு
- மத்திய தடய அறிவியல் ஆய்வகம்
CBI -யின் பதவிகள்:
- சிறப்பு இயக்குநர்
- கூடுதல் இயக்குநர்
- இணை இயக்குநர்
- டெபுடி தலைமைக் காவல்துறை ஆய்வாளர்
- உயர் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- காவல்துறைக் கண்காணிப்பாளர்
- கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- டெபுடி காவல்துறைக் கண்காணிப்பாளர்
- ஆய்வாளர்
- துணை ஆய்வாளர்
- உதவித் துணை ஆய்வாளர்
- தலைமைக் காவலர்
- உயர் காவலர்
- காவலர்
தொடர்புடைய பதிவுகள் |
அமலாக்கத்துறை என்றால் என்ன |
யூனியன் பிரதேசம் என்றால் என்ன |
TNSDMA என்பதற்கான விரிவாக்கம் என்ன |
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |