செபாலிக் நிலையில் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் தெரியுமா?

Cephalic Position Tamil

செபாலிக் நிலையில் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும்?

Cephalic Position Tamil – ஹாய் நண்பர்களே வணக்கம்.. இது நம்ம பொதுநலம்.காம் இணையதளம். நமது இணையத்திலை பலவகையான பயனுள்ள தகவல்களை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் செபாலிக் நிலை என்றால் என்ன?, செபாலிக் நிலையில் குழந்தை வயிற்றில் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Baby Position:

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமடைந்த 8-வது மாதம் கடைசியில் குழந்தை வெளியே வருவதற்கு தயாராகி கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தை வயிற்றில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய ஸ்கேன் செய்து பார்ப்பார்கள், அப்படி பார்க்கும் பொழுது குழந்தை வயிற்றில் எந்த நிலையில் இருக்கிறது என்று ஸ்கேன் ரிப்போர்ட்டில் எழுதப்படுவதுதான் Baby Position ஆகும். இவற்றில் இரண்டு நிலைகள் உள்ளது அவை.. Cephalic Position மற்றும் Breech Position ஆகும். இந்த இரண்டு Position-ம் குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. சரி இந்த இரண்டு நிலைக்கான அர்த்தனைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Cephalic Position என்றால் என்ன?

cephalic position என்பது குழந்தை தலை பெண்ணின் பிறப்புறுப்பில் சரியான நிலையில் திரும்பிவிட்டது என்பதை குறிப்பதை தான் cephalic position என்பார்கள். இந்த நிலையில் குழந்தையின் தலை திரும்பிவிட்டது என்றால் 97% உங்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. cephalic position மற்றும் Vertex position  இவை இரண்டுமே ஒரே நிலை தான். Vertex position என்று சொன்னால் அச்சம் கொள்ள தேவையில்லை.

cephalic position என்று சொன்னவுடன் நீங்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது. 100% உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக நீங்கள் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதாவது இத்தகையக கால கட்டத்தில் நீங்கள் நாற்காலியில் அமர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கீழ் தரையில் சம்மனமிட்டுத்தான் அமர வேண்டும். அதேபோல் குனிந்து நிமிர்த்து வேலை பார்க்க வேண்டும்.  cephalic position-யில் குழந்தை மோல் படத்தில் காட்டியுள்ளது போல் தான் இருக்கும்.

Breech Position என்றால் என்ன?

இந்த Breech Position-யில் மூன்று நிலைகள் உள்ளது.. அவை Complete Breech, Footling Breech, Frank Breech ஆகியவை ஆகும். இந்த நிலைகளில் குழந்தை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் தான் இருக்கும். இந்த Breech Position நிலையில் குழந்தை வயிற்றில் இருந்தால் குலந்திக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. ஆனால் அந்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்தின் போது, சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும். இருப்பினும் நீங்கள் குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பது, தரையில் சம்மணமிட்டு அமர்வது, உடற்பயிற்சி போன்ற செயல்களை செய்வதன்  மூலம். குழந்தை தலை சரியான நிலையில்லை திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com