Difference Between Confirm and Conform in Tamil
நம்மில் பலபேருக்கு Confirm மற்றும் Conform என்ற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம் என்ற குழப்பம் இருக்கும். அதாவது, இவை இரண்டின் உச்சரிப்பும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், இது இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளது என்று கூறுகிறார்களே என்று யோசித்து இருப்போம். எனவே உங்களின் குழப்பத்தினை போக்கும் வகையில் இப்பதிவில் Difference Between Confirm and Conform in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க.
நாம் பெரும்பாலான நேரங்களில் கன்போர்ம் என்ற வார்த்தையை கூறி இருப்போம். அதாவது, நீ கன்ஃபார்ம் கோவிலுக்கு வருவாயா.? என இதுபோன்ற பலவற்றை கேட்டுருப்போம் அல்லது அதற்கான பதிலை கூறியிருப்போம். அனால், Confirm மற்றும் Conform வேறுபாடு பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்கள் இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
Confirm Meaning in Tamil:
Confirm என்றால் தமிழில் உறுதிப்படுத்துதல் என்பது அர்த்தம் ஆகும். அதாவது, நீங்கள் தமிழில் உறுதியாக என்று கூறினால் அதனை ஆங்கிலத்தில் Confirm என்றுகூறலாம். நான் கட்டாயமாக அதை செய்கிறேன், நாம் உண்மையாக இன்று சென்னைக்கு போகிறேன். என ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி கூறுவதாகும்.
Confirm Meaning Examples in Tamil:
- He was confirmed as a member of the Church of England- அவர் சர்ச் ஆஃப் இங்கிலாந்து உறுப்பினராக உறுதி செய்யப்பட்டார்.
- Can you confirm this? – இதை உறுதிப்படுத்த முடியுமா?
- Have you confirmed the train tickets – ரயில் டிக்கெட்டுகளை உறுதி செய்துவிட்டீர்களா?
- Please confirm whether your ticket has been bookedநீங்கள் உங்கள் டிக்கெட் பதிவு செய்யப்பட்டதா என்பதை confirm செய்யவும்.
Expiry Date -க்கும் Best Before Date -க்கும் என்ன வித்தியாசம்..?
Conform Meaning in Tamil:
Conform என்றால் தமிழ் மதித்தல் அல்லது ஒத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் ஒரு நிறுவனத்தின் விதிமுறைகளை ஒத்துக்கொள்கிறீர்கள் என்றால் அதனை ஆங்கிலத்தில் Conform என்று கூறலாம்.
Conform Meaning in Tamil Words Examples:
You must conform to the school rules – நீங்கள் முக்கியமாக பள்ளியின் விதிமுறைகளை மதிக்க வேண்டும் /ஒத்துப்போக வேண்டும் என்பதாகும்.
This company must conform to the dress code- இந்த நிறுவனம் Dress Code-க்கு conform ஆக வேண்டும்
Difference Between Confirm and Conform Meaning in Tamil:
Confirm | Conform |
Confirm என்றால் உறுதிப்படுத்துதல் ஆகும்.
ஏதவது ஒரு விஷயம் சரியா என்பதை உறுதி கூறுவது. |
Conform என்றால் ஒப்புக்கொள் என்பதாகும்.
ஒரு விதிமுறை அல்லது சமூக மரபுக்களுக்குகேற்ப நடந்து கொள்வது |
தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |