வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு | EP KO 306 Section in Tamil

Updated On: March 3, 2025 7:27 PM
Follow Us:
EP KO 306 Section in Tamil
---Advertisement---
Advertisement

இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவின் விளக்கம் 

இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு நிறைய இருக்கின்றது. அதில் ipc 360 இந்த சட்டத்தினை பற்றி இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து வகையான அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860-யில் வரையப்பட்டு 1862-யில் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது. சரி இந்த பதிவில் இந்திய தண்டனை சட்டம் 306 என்றால் என்ன? எதற்காக இந்த இந்த தண்டனை வழங்கப்படுகிறது. என்ன தண்டை வழங்கப்படுகிறது. இந்த EPKO section 306 பிரிவில் எவ்வளவு அபராதம் தொகை செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil):

indhiya thandanai sattam 306

இந்த சட்டத்தின்படி யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். இந்த தண்டனையை தான்  இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரிவு 306 – தற்கொலைக்கு தூண்டுதல்:

  • ஒருவர் தற்கொலை செய்யும் விதமாக மற்றொருவரை தூண்டியதன் காரணமாக அவர் உயிரிழந்தால், தூண்டிய நபர் IPC Section 306-ன் கீழ் குற்றவாளியாகக் கருதப்படுவார்.
  • இது ஒரு கடுமையான குற்றமாக (Serious Offense) இருக்கிறது.

தண்டனை:

  • 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை (Imprisonment up to 10 years)
  • அபராதம் (Fine) அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம்.
  • இது ஜாமீன் கிடைக்காத குற்றம் (Non-Bailable Offense) ஆகும்.

எடுத்துக்காட்டு:

நண்பர் மண்டலத்தில்:

ஒரு நபர் தனது நண்பரை தொடர்ந்து ஒடுக்கும் அல்லது அவமானப்படுத்தும்.
இதனால் நண்பர் மன அழுத்தத்தில் சிக்கி தற்கொலை செய்து கொண்டால், அவமானப்படுத்திய நபர் 306 IPC-ன் கீழ் குற்றவாளியாக மாறுவார்.

கணவன் – மனைவி பிரச்சனை:

கணவன் தொடர்ந்து தனது மனைவியை பிணங்கிவைத்து, அநாகரிகமாக நடந்து கொள்ள, மனைவி மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்கிறாள்.
கணவன் மீது IPC Section 306-ன் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.

தொழிலிடங்களில் மானசீக ஒடுக்குமுறை:

ஒருவரை தொடர்ந்து வேலைப்பளுவில் துன்புறுத்தி, அவர் தற்கொலை செய்யும்படி சூழ்நிலையைக் கொண்டு வந்தால், மேலதிகாரிகள் மீது பிரிவு 306-ன் கீழ் வழக்கு தொடரலாம்.

நீதிமன்ற நடைமுறை:

  • குற்றவியல் வழக்கு (Criminal Case) ஆக பதிவு செய்யப்படும்.
  • பிராரம்பிக்க முடியாத குற்றம் (Non-Compoundable Offense) – பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் நேரடியாக
  • வழக்கை வாபஸ் பெற முடியாது.
  • வழக்கு விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் (Sessions Court) நடைபெறும்.
பாகப்பிரிவினை சட்டம்
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்
போக்சோ சட்டம் என்றால் என்ன?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now