Excel-யில் இது கூட தெரியாம இருக்குறது ரொம்ப தப்புங்க..!

Advertisement

Excel Basics for Beginners in Tamil

வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Excel பற்றி தான். Excel பற்றி அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள வந்திருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Excel என்பது Microsoft நிறுவனம் அறிமுகம்படுத்திய ஒன்றாகும். இந்த Excel பொதுவாக அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இந்த Excel பற்றி அனைத்தும் தெரியாது என்றாலும், அதனுடைய அடிப்படை விஷயங்களை பற்றி அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இங்கு நாம் Excel பற்றிய அடிப்படை விஷயங்களை பற்றி அறியலாம் வாங்க..

No: 1

Excel Sheet-ஐ open செய்தவுடன் மேல் படத்தில் உள்ளது போல் தான் இருக்கும்.. அவற்றில் File என்ற option தான் முதலில் இருக்கும். அதனை கிளிக் செய்தால் Home, New, Open, Info, Save, Save As, Print, Share, Export என்ற Option-கள் இருக்கும். இவற்றில்..

New என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதியதாக ஒரு Excel Sheet Open ஆகும்..

Open என்ற Option நீங்கள் ஏற்கனவே ஏதாவது File Save செய்து உள்ளீர்கள் என்றால் அதற்கு Open என்ற Option-ஐ கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே Save செய்து வைத்திருந்த File அல்லது Sheet-ஐ Open செய்துகொள்ளலாம்.

Save என்பது நீங்கள் புதியதாக Edit செய்த Sheet-ஐ Save செய்ய வேண்டும் என்றால் Save என்ற Option-ஐ கிளிக் செய்து Save செய்து கொள்ளலாம்.

Save As என்பது நீங்கள் ஏற்கனவே Edit செய்த Sheet-ஐ மீண்டும் Edit செய்துள்ளீர்கள் என்றால் அதற்கு நீங்கள் Save As என்ற option-ஐ கிளிக் செய்து Save செய்து கொள்ளலாம்.

Print என்ற Option நீங்கள் உருவாக்கிய Fail Print எடுக்க வேண்டும் என்றால் Print என்ற Option கிளிக் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

அதுவே நீங்கள் தயார் செய்த File-ஐ மற்றவர்களுக்கு Share செய்ய வேண்டும் என்றால் Share என்ற option-ஐ  கிளிக் செய்து Share செய்துகொள்ளலாம்.

நீங்கள் கிளிக் செய்த File-யில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் மேல் இருக்கும் ஏரோ மார்கை கிளிக் செய்தாலே போதும் வெளியே வந்து விடும்.

File-க்கு அப்பறம் Home, Insert, Page Layout, Formulas, Data, Review, view, Help, PDFelement என்று Option-கள் இருக்கும். இந்த ஒவ்வொரு Options-க்கும் செட்டிங்ஸ் என்பது மாறுபடும்.

No: 2

Excel-யில் உள்ள ஒவ்வொரு கட்டமும் செல் (Cell) என்று அழைக்கப்படுகிறது. நாம் Excel Sheet-யில் எங்கு நமது mouse cursor-ஐ வைத்தாலும் அது ஒரு Cell-ஆக கருதப்படுகிறது. இந்த cell-யிற்கும் வால்யூம் என்று உள்ளது அதனை Name Box என்று அழைப்பார்கள்.

No: 3

Name Box பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் நாம் Row மற்றும் Column பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். Excel Sheet-யில் A, B, C, D, E, F, G, H என்று நீண்டு கொண்டு போவது தான் Column என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் 1, 2, 3, 4, 5, 6 என்று நீண்டு கொண்டு போவதைத்தான் Row என்று அழைக்கப்படுகிறது.

No: 4

இப்போது Name Box என்ன என்பதை பற்றி அறியலாம்.. Name Box என்பது நாம் நமது mouse cursor-ஐ 5-வது Row-யில் D என்ற Column-யில் வைக்குறோம் என்றால் அந்த செல்லிற்கு ஒரு வால்யூம் இருக்கும். அதனை தான் Name Box என்கிறோம். உதாரணத்திற்கு மேல் உள்ள படத்தை பாருங்களேன். Name Box-யில் D5 என்ற வால்யூம் உருவாகியிருக்கும். இப்படி நாம் நமது mouse cursor-ஐ எங்கு வைத்தாலும் அதற்கு cell value என்ற ஒன்று இருக்கும்.

No: 5

நீங்க ஒரு Word Type பண்றீங்க அதை கொஞ்சம் மாடலாக மாற்ற வேண்டும் என்றால் Bold செய்து கொள்ளலாம், அல்லது Italic வடிவில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது அந்த Word-ஐ Underline செய்ய வேண்டும் என்றால் Underline என்பதை கிளிக் செய்து Underline செய்து கொள்ளலாம்.

சிலவகையான Shortcut:

  • Bold செய்வதற்கு (Ctrl + B)
  • Italic வடிவில் ஒரு வார்த்தையை மாற்றுவதற்கு (Ctrl + I)
  • ஒரு வார்த்தையை Underline செய்வதற்கு (Ctrl + U)
  • ஒரு Word-ஐ Copy செய்வார்க்கு Ctrl + C 
  • Paste செய்வதற்கு Ctrl + V 

Excel Steps Tamil

ஒரு Row-வில் 1 இருந்து 50 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்களை Type செய்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கு ஆக இதற்கும் Shortcut இருக்கிறது. ஆக No Box-யில் எண்களை Type செய்ய முதலில் 1 முதல் 3 எண்கள் வரை வரிசையாக Type செய்து கொள்ளுங்கள் பிறகு 3 என்ற Row-வில் உங்கள் Mouse Cursor-ஐ வைக்கவும் பிறகு அந்த Box-யின் ஓரத்தில் உங்கள் Mouse Cursor-ஐ வைக்கும்போது ஒரு Plus Icon வரும் அப்போது Ctrl அழுத்திக்கொண்டு Mouse Cursor-ஐ கீழ் நோக்கி இழுத்தோம் என்றால் Number வரிசையாக அதுவாகவே வந்துவிடும். நாம் Type செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

வெறும் Plus Icon-யின் ஓரத்தை மட்டும் பிடித்து இழுக்க கூடாது. Ctrl-ஐ அழுத்திக்கொண்டு தான் Cursor-ஐ இழுக்க வேண்டும்.

இது மாதிரி Excel-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது.. இப்பொழுது சொல்லப்பட்டுள்ளது Excel-யில் மிக மிக அடிப்படையான விஷயம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
தமிழ் வழி English Grammar கற்றுக்கொள்ளலாம் வாங்க..!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement