கருடன் வேறு பெயர்கள்..! | Garudan Veru Peyargal In Tamil..!
நாம் தினமும் இறைவனை வழிபாடு செய்த பிறகு தான் நம் அன்றாட வேலையை தொடங்குவோம். நம் வழிபாடும் இறைவனுக்கு வெவ்வேறு பெயர்களும் உண்டு ஆனால் நமக்கு இறைவனின் அனைத்து பெயர்களும் தெரியாது. இன்றைய பதிவில் கருடன் உடைய வேறு பெயர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். கருடனுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது.
நாம் வணங்கும் தெய்வம் ஆகிய சிவன், பார்வதி, கணபதி, முருகன், விஷ்ணு ஆகியவர்களுடைய வேறு பெயர்களை பற்றி நாம் சிறிய அளவுவாவது தெரிந்திருப்போம். ஆனால் அவர்களுடைய அனைத்து பெயர்களும் நமக்கு தெரியாது. அதேபோல் கருடன் உடைய அனைத்து பெயர்களையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
சீதா தேவியின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?
கருடன்:
கருட பகவான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். விஷ்ணு பகவானின் வாகனம் கருடன் தான். விஷ்ணுவும் கருடனும் ஒன்று என்று கூறுவார்கள். கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர் என்று புராணங்கள் கூறுகிறது.
கருடன் வேறு பெயர்கள்:
- விஷ்ணுபிரியன்
- விஹாகேஸ்வரன்
- சுபர்ணன்
- புள்ளரசன்
- பட்சி ராஜன்
- பெரிய திருவடி
- தெய்வப்புள்
- கொற்றப் புள்
- கருடாழ்வார்
- மங்களாலயன்
- புஷ்பப்பிரியன்
- வினத்தைச் சிறுவன்
- வேதஸ்வரூபன்
- வயின தேயன்
- இமையில்
- உவணன்
- ககபதி
- கதேஸ்வரன்
- கலுழன்
- சிதமுகன்
- சிதாநதம்
- தார்க்கியம்
- நாகாசனன்
- நாகாந்தகன்
- பன்னகவயரி
- பன்னகாசனன்
- புதனுக்கிணையோன்
- புன்னரசு
- மாலூர்தி
- விஷ்ணுரதம்
தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் வேறு பெயர்கள் என்ன தெரியுமா..?
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |