கிராம உதவியாளர் தேர்வுக்கு ரெடி ஆகுறீங்களா? நில வகைப்பாடு பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்!

Advertisement

Grama Nila Vagaipadu in Tamil

அரசு வேலைக்கு தயார்  செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். கிராம உதவியாளர் தேர்விற்கு தயார்செய்து கொண்டுள்ளீர்களா? அப்போ நிலவகைப்பாடு பற்றி கண்டிப்பா தெரிஞ்சிகிட்டே ஆகணும். அரசாங்கம் நிலத்தினை எவ்வாறெல்லாம் வகைப்படுத்துகிறது என்பதை இப்பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம். நமது அரசாங்கமானது நிலத்தினை நீர் ஆதாரங்கள், நில உரிமைகள், மகசூல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.

நில வகைப்பாடு என்றால் என்ன?

  • நஞ்சை
  • புஞ்சை
  • மானாவாரி
  • நத்தம்
  • நத்தம் புறம்போக்கு
  • பட்டா  நிலம்
  • புறம்போக்கு
  • தீர்வை ஏற்பட்ட  தரிசு
  • தீர்வை ஏற்படாத தரிசு  போன்று நிலங்களை வகைப்படுத்தலாம்.

நஞ்சை நிலம் என்றால் என்ன?

grama nila vagaipadu in tamil

இதனை நன்செய் நிலம் என்றும் கூறுவர். நஞ்சை  நிலமானது விவசாயத்திற்கு உகந்த நிலமாகும். நீர்ப்பாய்ச்சல் வசதி அதிகமாக உள்ள நிலம் நஞ்சை நிலம் ஆகும். இந்நிலங்களில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகம் விளைகின்றன. இந்நிலத்தில் மண்ணின் தரமானது நன்றாக இருக்கும்.

👉Tet Exam பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

நஞ்சை  நிலத்தினை 2 வகைகளாக பிரிக்கலாம்.

  • ஒருபோக நஞ்சை
  • இருபோக நஞ்சை

ஒருபோக நஞ்சை:

ஒருபோக நஞ்சை என்பது ஒரு பசலி ஆண்டில் ஒருபோகம் பயிர்கள் விளைய தேவையான தண்ணீர் தங்குதடையின்றி கிடைக்கும் நிலம் ஆகும்.

இருபோக நஞ்சை:

ஒரு பசலி ஆண்டில் இருபோகம் விளைய தேவையான தண்ணீர் தங்குதடையின்றி கிடைக்கும் நிலமாகும்.

புஞ்சை நிலம் என்றால் என்ன?

புஞ்சை நிலம் என்றால் என்ன

இதனை புன்செய் நிலம் என்றும் கூறுவர். நஞ்சை நிலத்தின் மண் தரத்தை காட்டிலும் புஞ்சை நிலத்தின் மண் தரம் சற்று குறைவு தான்.

புஞ்சை நிலம் கிணறுகள் மற்றும் மழைநீரை நம்பி இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்பாய்ச்சும் வசதிகள் இல்லாத நிலங்கள் புஞ்சை நிலம் எனப்படும். இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாக தேவைப்படுகின்ற பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.

மானாவாரி நிலம் என்றால் என்ன?

மானாவாரி நிலம் என்றால் என்ன?

மழையினை மட்டுமே நம்பி இருக்கின்ற நிலங்கள் மானாவாரி நிலம் எனப்படும். மழை பெய்தால் மட்டுமே இந்நிலத்தில் பயிர்கள் பயிரிடப்பப்டுகின்றன. மழை இல்லை என்றால் பயிர்கள் பயிரிடப்படுவதில்லை.

👉பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? What is Patta Chitta Adangal in Tamil..!👈

நத்தம் நிலம் என்றால் என்ன?

நத்தம் என்ற  சொல்லுக்கு குடியிருப்பு என்று பொருள். கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு என்று ஒதுக்க பட்ட நிலம். விவசாய நிலங்கள் இல்லாமல் மக்கள் வசிக்கின்ற ஊர்பகுதி நத்தம் எனப்படும்.

நத்தம் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

மக்கள் வசிக்கும் ஊர்பகுதிகளில் அமைந்த அரசுக்கு சொந்தமான புறம்போக்கு  நிலங்கள் நத்தம் புறம்போக்கு எனப்படும்.

பட்டா நிலம் என்றால் என்ன?

நஞ்சை, புஞ்சை, மானவாரி நிலங்களை உள்ளடக்கிய நிலம் தான் பட்டா  நிலம்.

பட்டா என்பது நிலத்தின் உரிமை ஆவணமாகும். நில பட்டா யார் பெயரில்  இருக்கிறதோ அவரே அந்நிலத்தின் தற்போதைய உரிமையாளர்.  பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம் , வரித்தொகை எவ்வளவு?, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளரின் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

புறம்போக்கு நிலம்

பட்டா இல்லாத அரசுக்கு சொந்தமான நிலம் புறம்போக்கு நிலம் எனப்படும். மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், நீர்நிலைகள், சாலைகள், இடுகாடு போன்ற பொது பயன்பாட்டிற்கான நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் ஆகும். இந்நிலங்களில் வேளாண்மை செய்ய முடியாது.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

👉பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்!👈

தரிசு நிலம் என்றால் என்ன?

தரிசு நிலம் என்றால் என்ன

சாகுபடி செய்யாமல் இருக்கும் நிலங்கள் தரிசு நிலம் எனப்படும். தரிசு நிலத்தினை போடுகால் என்றும் கூறுவர்.

தீர்வை ஏற்பட்ட தரிசு &  தீர்வை ஏற்படாத தரிசு

அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்ய தகுதிவாய்ந்த நிலங்கள் தீர்வை ஏற்பட்ட தரிசு எனப்படும். சாகுபடி செய்ய இயலாத நிலங்கள் தீர்வை ஏற்படாத தரிசு நிலங்கள் எனப்படும்.

👉கடைசி நேரத்தில் எப்படி தேர்வுக்கு தயாராவது?👈

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement