அனுமனின் வேறு பெயர்கள்.!

Advertisement

அனுமன் வேறு பெயர்கள் | Hanuman Veru Peyargal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அனுமனின் வேறு பெயர்களை (Hanuman Veru Peyargal in Tamil) தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். அனுமன் இந்து புராணங்களின் படி முக்கியமான தேவனாக இருக்கிறார். அனுமான் அஞ்சனைக்கும் கேசரிக்கும் மகனாக பிறந்தவர். அனுமன் பெரும்பாலும் மாருதி மற்றும் ஆஞ்சநேயர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இராமனின் பக்தனாக இருக்கிறார். அனுமன் என்பவர் பாரம்பரியமாக காற்று தெய்வமான வாயுவின் ஆன்மீக சந்ததி என்று கூறப்படுகிறது. வாயுபுத்திரர்

இப்படி அனுமனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே முதலில், அனுமனிற்கு வேறு என்ன பெயரெல்லாம்  இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம். அனுமனிற்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. ஆனால், நமக்கு அனுமன், ஆஞ்சநேயர் என்ற பெயர்கள் தான் தெரியும். ஆகையால், இப்பதிவின் வாயிலாக அனுமனிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அனுமன் 108 போற்றி..!

அனுமனின் வேறு பெயர்கள்:

அனுமன் வேறு பெயர்கள்

  • சத்திய ஆஞ்சநேயர்
  • மாருதி
  • ஆஞ்சநேயர்
  • பாலரூப ஆஞ்சநேயர்
  • அனுமேஸ்வரர்
  • திரி நேத்ர தசபுஜ அனுமன்
  • பஞ்சமுக ஆஞ்சநேயர்
  • யந்தயோதாராக அனுமன்
  • யோக ஆஞ்சநேயர் 
  • வால் அறுபட்ட ஆஞ்சநேயர் 
  • ஜன்மபூமி ஆஞ்சநேயர் 
  • வீர ஆஞ்சநேயர் 
  • ஆஞ்சநேய மூர்த்தி
  • அனுமந்தய்யா
  • ஆஞ்சநேயலு
  • சஞ்சீவய்யா
  • மஹாவீர்
  • கந்தவாஹனன்
  • அனுமேஸ்வரர்
  • வாயுபுத்திரர்

மேலே கூறப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் அனுமனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும்.  தமிழ்நாட்டில் அனுமன், ஆஞ்சநேயர், ஆஞ்சநேய மூர்த்தி என்றும், கர்நாடக மாநிலத்தில் அனுமந்தய்யா என்றும், ஆந்திராவில் ஆஞ்சநேயலு, சஞ்சீவய்யா என்றும் அழைக்கப்படுகிறார்.  மஹாராஷ்டிராவில் மாருதி, மஹாவீர், சோனி மற்றும் மாருதி பிகாரி என்றும், உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் பஜ்ரங்கபலி என்றும் அழைக்கப்படுகிறார். மேலும், சஞ்சீவி மலை போன்ற இடங்களில், கந்தவாஹனன் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.  

அனுமன் பெயர்கள்   அர்த்தங்கள் 
சத்திய ஆஞ்சநேயர் உண்மையை பிரதிபலிக்கும் வடிவம்
பாலரூப ஆஞ்சநேயர் குழந்தை வடிவில் தோன்றும் அனுமன்
அனுமேஸ்வரர் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் தேவன்
திரி நேத்ர தசபுஜ அனுமன் மூன்று கண்களுடன், பத்து கை கொண்ட வடிவம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் தோன்றும் அனுமன்.
யந்தயோதாராக அனுமன் யோகம் மற்றும் ஆன்மிகத்தின் பிரதிநிதியாக இருப்பவர்.
யோக ஆஞ்சநேய யோகத்தில் திறமை பெற்றவர்.
வால் அறுபட்ட ஆஞ்சநேயர் வாலுடன் கூடிய ஆஞ்சநேயர்
வீர ஆஞ்சநேயர் வீரத்துடன் கூடிய வடிவம் மற்றும் போரில் உதவியவர்.
ஜன்மபூமி ஆஞ்சநேயர் பிறப்பிடம் தொடர்பான அம்சங்கள்

அனுமன் பெயர்க்காரணம்:

சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கு “தாடை” என்றும், “மன்” என்பதற்கு ” பெரியது” என்றும் அர்த்தம் ஆகும். பெரிய தாடையை உடையவன் என்ற காரணத்தினால் அனுமன் என்று பெயர் வந்தது. அதுமட்டுமில்லாமல், அஞ்சனையின் மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பார்கள்.

குரங்கு எங்கயாவது இறந்து கிடந்தது பார்த்திருக்கிறீர்களா..! அனுமன் இறைவனிடம் பெற்ற வரம் உங்களுக்கு தெரியுமா..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement