பிறந்த குழந்தைக்கு மொத்தம் எத்தனை எலும்புகள் இருக்கும் தெரியுமா..?

Advertisement

How Many Bones Have New Born Baby in Tamil 

இன்றைய பதிவு உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால் இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் பிறந்த குழந்தைகளுக்கு மொத்தம் எத்தனை எலும்புகள் இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக எலும்புகள் என்றால் அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் தானே இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகின்றது. ஆனால் நீங்கள் யோசிப்பது போல அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் எலும்புகள் இருப்பதில்லை. ஆம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் அது உங்களுக்கே புரியும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன

How Many Bones in New Born Baby in Tamil:

How Many Bones in New Born Baby in Tamil

பொதுவாக எலும்புகள் இல்லை என்றால் நமது உடலுக்கு ஒரு சரியான வடிவமைப்பே கிடைக்காது. அப்படி மனிதனின் உடலுக்கு சரியான வடிவமைப்பை அளிக்கிற எலும்புகள் மட்டும் இல்லை என்றால் நம்மால் நிற்கவோ, நடக்கவோ, ஓடவோ ஏன் உட்காரவும் கூட முடியாது.

அப்படி மனிதனின் உடலுக்கு சரியான வடிவமைப்பை அளிக்கிற எலும்புகள் அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் இருப்பது இல்லை. ஆம் நண்பர்களே பிறந்த குழந்தைக்கு ஒரு எண்ணிக்கையிலும் குழந்தை வளர்ந்து பிறகு ஒரு எண்ணிக்கையிலும் உள்ளது.

 இப்பொழுது பிறந்த குழந்தை ஒன்று உள்ளது என்றால் அதற்கு 270 எலும்புகள் உள்ளது. அதுவே அந்த குழந்தை நன்கு வளர்ந்து இளம் வயது வந்த பிறகு அதற்கு 206 முதல் 213 எலும்புகளாக மாறுகின்றன. 

ஏனெனில் குழந்தைகளுக்கு எலும்பை விட குருத்தெலும்பு அதிகமாக உள்ளது. ஒரு குழந்தையின் எலும்புக்கூடு பெரும்பாலும் குருத்தெலும்புகளால் ஆனது. ஒரு நபர் வளரும்போது, ​​இந்த குருத்தெலும்புகளின் பெரும்பகுதி எலும்புப்புரை (Ossification) எனப்படும் செயல்பாட்டினால் எலும்பாக மாறுகின்றன.

எனவே வயது முதிர்ந்த நிலையில், மனிதனின் எலும்புக்கூட்டில் வெறும் 206 எலும்புகள் மட்டுமே உள்ளன.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முதுகெலும்பு ஆரோக்கியமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement