How Many Languages In Indian Currency
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள்.
சரி நாம் பயன்படுத்தும் இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தான் இந்த பதிவில் நாம் காணப்போகின்றோம். அதற்கு முன் இந்திய நாணயத்தில் இருக்கும் குறியீடு பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 இந்திய நாணயத்தில் இந்த குறியீடு இருக்க காரணம் என்ன தெரியுமா
இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இருக்கிறது..?
பொதுவாக நாம் இந்த உலகில் வாழ்வதற்கு முக்கிய தேவையாக இருப்பது இந்த பணம் தான். உடனே நீங்கள் உயிர் வாழ்வதற்கு உணவும், நீரும் தானே முக்கிய தேவை என்று சொல்வீர்கள். ஆனால் அந்த உணவையும் நீரையும் கூட நாம் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த அளவிற்கு பணம் முக்கிய தேவையாக இருக்கிறது.
சரி நாம் அனைவருமே அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது பணம் மட்டும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் பணத்தில் எத்தனை மொழிகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் என்ன அதை பற்றி இங்கு காணலாம்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா |
பொதுவாக நாம் பயன்படுத்தும் இந்திய ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 17 மொழிகள் அச்சிடப்பட்டுள்ளன. அந்த மொழிகள் அனைத்தும் ரூபாய் நோட்டுகளின் பின் புறத்தில் வரிசையாக அச்சிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல் ஏன் நம் இந்திய ரூபாய் நோட்டுகளில் இத்தனை மொழிகள் இருக்கின்றன என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கு காரணம், இவை இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் படி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் என்பதால் தான் இம்மொழிகள் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது உங்களுக்கு தெரியுமா |
அதுபோல ரூபாய் நோட்டுகளின் ஒரு பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டும் தான் இருக்கும். மற்றொரு பக்கத்தில் தான் மற்ற 15 மொழிகளும் இருக்கும். மேலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள மொழிகளை பற்றி பார்ப்போம்.
- தமிழ்
- அஸ்ஸாமி
- பெங்காலி
- குஜராத்தி
- கன்னடம்
- காஷ்மீரி
- கொங்கனி
- மலையாளம்
- மராத்தி
- நேபாளி
- ஒடியா
- பஞ்சாபி
- சமஸ்கிருதம்
- தெலுங்கு
- உருது
- ஆங்கிலம்
- ஹிந்தி
இந்த பயனுள்ள தகவலை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா..? இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |