How Many Liters Per Cubic Foot Of Water in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே எல்லா தகவல்களும் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் நம்மில் பலரும் தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவோம்.
ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். ஆனால் இனி அப்படி யோசிக்க தேவையில்லை. அதற்கு தான் நம் பொதுநலம்.காம் பதிவு இருக்கிறதே. அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ஒரு கன அடி தண்ணீர் எத்தனை லிட்டர் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். சரி இதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
ஒரு கன அடி தண்ணீர் எத்தனை லிட்டர்:
ஒரு கன அளவீடு என்பது ஒரு நேரியல் அளவின் முப்பரிமாண வழித் தோன்றலாகும். எனவே ஒரு கன அடி என்பது 1 அடி நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட கனசதுரத்தின் கன அளவு என வரையறுக்கப்படுகிறது.
அதனால் மெட்ரிக் அடிப்படையில் பார்த்தால், ஒரு கன அடி 0.3048 மீட்டர் நீளம் பக்கங்கள் கொண்ட ஒரு கன சதுரம் ஆகும். ஆனால் ஒரு கன அடி சுமார் 0.02831685 கன மீட்டர் அல்லது 28.3169 லிட்டருக்கு சமமானதாகும்.
அதாவது ஒரு கன அடி தண்ணீர் 28.3169 லிட்டர் வரை இருக்கும் என்று சொல்லப்டுகிறது.
அதுபோல ஒரு கன அடி நீரின் எடையானது எவ்வளவு இருக்கும் என்று நமக்கு தெரியாது. அதனால் அதையும் தெரிந்து கொள்வோம்.
நீரின் அடர்த்தி ஒரு கன அடிக்கு 62.4 பவுண்டுக்கு சமம். எனவே ஒரு கன அடி தண்ணீருக்கு 62.4 பவுண்டுகள் அல்லது தோராயமாக 28.3 கிலோ எடை வரை இருக்கும். அதுபோல ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு கிலோ எடையுள்ளதாகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |