ஒரு யூனிட் ரத்தம் எத்தனை மில்லி லிட்டர் இருக்கும் தெரியுமா..?

Advertisement

How Many Milliliters Is One Unit of Blood in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தினமும் ஒரு தகவலை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். இதுவரை நீங்கள் இதுபோல யோசித்தது போதும். இனி நம் பொதுநலம் பதிவை பின் தொடருங்கள்..! எங்கள் பொதுநலம் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று மேல் இருக்கும் தலைப்பை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி ஒரு யூனிட் இரத்தம் எத்தனை மில்லி லிட்டர் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..

ஒரு யூனிட் ரத்தம் எத்தனை மில்லி லிட்டர் இருக்கும்: 

ஒரு யூனிட் ரத்தம் எத்தனை மில்லி லிட்டர் இருக்கும்

பொதுவாக இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இரத்தம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது மனிதனாக இருந்தாலும் சரி மற்ற ஜீவராசிகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் உடலில் இரத்தம் கண்டிப்பாக இருக்கும்.

மனிதர்கள் செய்யும் மிக பெரிய தானமே இரத்த தானம் தான். இன்றைய சூழலில் பலரும் இரத்த தானம் செய்ய முன் வருகிறார்கள். இரத்த தானம் செய்த பிறகு நம் உடலில் புதிய இரத்தம் சுரக்க ஆரம்பித்துவிடும்.

அதுபோல புதிய இரத்தம் சுரப்பதற்கு நாமும் சத்தான மற்றும் இரத்தம் ஊற உதவியாக இருக்கும் பழங்களை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் மட்டும் தான் நம் உடலில் இரத்தம் சுரக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை கடிகாரத்தின் முட்கள் ஒன்று சேரும் தெரியுமா..

மேலும் நம் இந்தியாவில் இரத்த தானம் செய்ய 18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். அதுபோல 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இல்லையென்றால் இரத்த தானம் செய்யலாம்.

சரி பொதுவாக மருத்துவமனையில் இரத்தம் தானம் செய்யும் போது 1 யூனிட் இரத்தம் கொடுங்கள் என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த ஒரு யூனிட் இரத்தமானது எத்தனை மில்லி லிட்டர் இருக்கும் என்று தெரியுமா..?

அதாவது  ஒரு யூனிட் இரத்தத்தில் பொதுவாக 450 மில்லிலிட்டர்கள் (மிலி) இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அளவீடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகளவில் மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே 1 யூனிட் இரத்தம் 450 மில்லி லிட்டர் ஆகும்.  

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement