ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன..?

How Many Nerves Does Humans in Tamil

How Many Nerves Does Humans

மனிதனாக பிறந்த அனைவருமே ஒரு மனிதனின் உடலில் இருக்கும் உறுப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் உடலானது எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று பல வகையான உறுப்புகளை கொண்டுள்ளது. நம் உடலில் இருக்கும் அனைத்தும் உறுப்புகளும் மிகவும் முக்கியமானது தான்.

உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..?

How Many Nerves Does Humans in Tamil: 

How Many Nerves Does Humans

நரம்பு மண்டலம் உங்கள் உடலின் முக்கியமான தொடர்பு நெட்வொர்க் என்று சொல்லலாம். நரம்புகள் உங்கள் உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது அதேபோல பராமரிக்கிறது. 

நரம்பு மண்டலம் நரம்பு செல்களின் வலையமைப்பால் ஆனது என்று சொல்லலாம். அந்த நரம்பு செல்களின் உதவியால் உங்கள் மூளை, முதுகெலும்பு மற்றும் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்கின்றன.

நரம்பு என்பது உடலுக்கும் மூளைக்கும் இடையில் செய்திகளைப் பெற்று அனுப்பும் ஓர் தொகுப்பாகும். நரம்புகளை உருவாக்கும் நியூரான்கள் என்று சொல்லக்கூடிய உயிரணுக்களில் இரசாயனம் மற்றும் மின் மாற்றங்கள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..?

 

 ஒரு மனிதனின் உடலில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை என்றாலும், மனிதனின் தலையின் மேற்புறத்தில் இருந்து கால் விரல்களின் நுனி வரை நூற்றுக்கணக்கான நரம்புகளும், பில்லியன் கணக்கான நியூரான்களும் உள்ளன என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.  

மனிதனின் நரம்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை மத்திய நரம்பு மண்டலம் – CNS மற்றும் புற நரம்பு மண்டலம் – PNS என்று சொல்லப்படுகிறது. 

உங்கள் மூளையின் கீழ் மேற்பரப்பில் மண்டை நரம்புகள் அமைந்துள்ளன. மூளை பகுதியில் இருக்கும் நரம்புகள் PNS இன் ஒரு பகுதியாகும். உங்கள் மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. 

அடுத்தது முதுகெலும்பு நரம்புகள். முதுகெலும்பு பகுதியில் இருக்கும் நரம்புகள் PNS இன் ஒரு பகுதியாகும். அவை உங்கள் முதுகுத் தண்டுவடத்திலிருந்து பிரிக்கப்படுகின்றன. 31 ஜோடி வகையான முதுகெலும்பு நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் உங்கள் உடலின் உணர்ச்சி மற்றும் பிற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.

ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn