How Many Times a Human Blinks a Day in Tamil
நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கண்களின் இமைகளை ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எத்தனை முறை இமைக்கின்றான் என்ற தகவலை பற்றி தான் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எத்தனை முறை இமைக்கின்றான் அது எதனால் போன்ற தகவலை அறிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
How Many Times Does a Person Blink a Day in Tamil:
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கண்கள் என்பது ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். அப்படிப்பட்ட கண்கள் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருப்பது தான் அதற்கு நன்மையை அளிக்கும்.
கண் இமைகள் தான் கண்கள் ஈரப்பதம் இன்றி உலர்ந்து போவதில் இருந்து பாதுகாக்கின்றன. இமைகளின் விளிம்பில் 20-30 சுரப்பிகள் வரை உள்ளன. கண் சிமிட்டும் பொழுதெல்லாம் கண் விழியை இவை சுத்தப்படுத்துகின்றன.
இரவு நேரத்தில் விலங்குகளின் கண்கள் ஏன் மின்னுகிறது உங்களுக்கு தெரியுமா
கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது. மேலும் கண்ணீர் விடும்பொழுது கண் விழியின் மேல் அமைந்திருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வருகிறது. இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.
சராசரியாக பெரும்பாலான மக்கள் ஒரு நிமிடத்திற்கு 15 – 30 முறை கண்களை சிமிட்டுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 900 – 1200 முறையும், ஒரு நாளைக்கு 14,400 – 19,200 முறையும், வாரத்திற்கு 1,00,800 – 1,34,400 முறையும் மற்றும் ஒரு ஆண்டுக்கு 5.2 முதல் 7.1 மில்லியன் முறையும் கண்களை சிமிட்டுகிறார்கள்.கண்களை சிமிட்டுவது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி புரிகின்றது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் உள்ள மொபைல் போன், தொலைக்காட்சி மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்தும் பொழுதெல்லாம் மனிதர்கள் கண்களை இமைப்பதையே மறந்துவிடுகிறார்கள். இதனால் கண்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் மொபைல் போன் மற்றும் கணினி போன்றவற்றை பார்ப்பதை குறைத்து கொள்ளவும்.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா |
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |