Human Breathe in Tamil
பொதுநலம் பதிவின் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை சுவாசிக்கின்றான் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? பதில் தெரியாதவர்கள் இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
மனிதனின் நகத்தை பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? |
How Many Times Do We Breathe In A Day in Tamil:
சுவாசம் என்பது நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் செய்யும் ஒரு செயலாகும். நாம் ஒரு நாளைக்கு சுமார் 22,000 முறைக்கு மேல் சுவாசிக்கிறோம் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
நாம் அனைவருமே சுவாசத்தால் இயக்கப்படுகின்றோம். நமது நுரையீரல் ஆக்ஸிஜனைக் கொண்டு நமக்கு எரிபொருளாகத் தருகிறது. நமது நுரையீரல் காற்றை சுவாசிக்கிறது.
பின் ஆக்ஸிஜனை நமது இரத்த ஓட்டத்தின் வழியாக அனுப்புகிறது. அது நம்மை நடக்கவும், பேசவும், நகரவும் அனுமதிக்கும் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நமது நுரையீரலும் நமது இரத்தத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து நாம் சுவாசிக்கும் போது அதை காற்றில் வெளியிடுகிறது. நமது நுரையீரல் காற்றை எவ்வளவு வேகமாக இழுக்கிறது என்பதை நமது மூளை கட்டுப்படுத்துகிறது.
மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது தெரியுமா..? |
நாம் உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது விளையாடும் போதும், நமது மூளை நமது நுரையீரலை வேகமாக வேலை செய்யச் சொல்கிறது. நாம் தூங்கும் போது அல்லது ஓய்வில் இருக்கும் போது, நமது நுரையீரலின் வேகம் குறைகிறது.
நுரையீரலில் சுமார் 2,400 கிலோமீட்டர் காற்றுப்பாதைகள் மற்றும் 300 முதல் 500 மில்லியன் காற்றுப் பைகள் (அல்வியோலி) உள்ளன.
அதிக நுரையீரல் திறன் கொண்டவர்கள் தங்கள் உடலைச் சுற்றி ஆக்ஸிஜனை வேகமாக அனுப்ப முடியும். அதேபோல ஓய்வெடுக்கும் போது சராசரி வயது வந்தவர் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 20 முறை சுவாசிக்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது உங்களுக்கு தெரியுமா..? |
மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.? |
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |