Heart Beat in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே இதயம் என்பது முக்கியமான ஒன்று. இதயம் இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். சரி ஒரு மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
How Many Times Does The Heart Beat in Tamil:
மனிதனின் உடலில் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக இயங்கி கொண்டிருப்பது இதயம் மட்டும் தான். அதனால் தான் இதயம் உடல் உறுப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது.
இதயமானது தசைகளால் ஆன உறுப்பு ஆகும். மனித உடலில் இருக்கும் மற்ற தசைகளை விட இதய தசைகள் தான் அதிகமாக வேலை செய்கிறது. மனிதனின் இதய துடிப்பானது தாயின் கருவறையில் 5 வார கருவாக இருக்கும் போது தொடங்கி சாகும் வரை தொடர்கிறது.
மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முதல் 80 முறை துடிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு ஆண்களை விடப் பெண்களின் இதயம் சராசரியாக 8 முறை அதிகம் துடிக்கிறது.உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள் |
நீங்கள் ஓய்வெடுக்கும் போது உங்கள் இதயம் நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கும். உங்கள் இதயம் ஒரு மணி நேரத்திற்கு 4,800 முறை துடிக்கிறது என்றால் ஒரு நாளைக்கு 1,15,200 முறை துடிக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
ஒரு வருடத்தில், மனிதனின் இதயம் சுமார் 42,048,000 முறை அதாவது 40 மில்லியனுக்கும் மேல் துடிக்கிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் 3 பில்லியனுக்கும் அதிகமாக துடிக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
அதுவே நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் இதயம் மிக வேகமாக துடிக்கிறது. காரணம், உடற்பயிற்சியின் போது உங்கள் உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க இரத்தத்தை இதயம் வேகமாக பம்ப் செய்கிறது.
மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |