மனித இதயத்தின் எடை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

How Much Does a Human Heart Weight

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் உடலில் உள்ள உறுப்புகளில் ஏதாவது ஒன்று சரியாக செயல் படவில்லை என்றால் கூட நம்முடைய உடலில் ஏதாவது பிரச்சனை வந்துவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் நம்மில் பாதிப்பேருக்கு சில கேள்விகள் தோன்றும். அது என்னவென்றால் நம்முடைய இதயம் எவ்வளவு எடை கொண்டுள்ளது மற்றும் நாடித்துடிப்பு எத்தனை முறை துடிக்கும் மற்றும் மூளை எவ்வளவு எடை கொண்டுள்ளது போன்ற கேள்விகள் அறிவுபூர்வமாக நமக்கு தோன்றும். ஆனால் அவை அனைத்திற்கும் நாம் பதிலை தேடுவது இல்ல யோசிப்பதோடு சரி. அதனால் தான் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் மனித இதயத்தின் எடை எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு எத்தனை முறை துடிக்கும் தெரியுமா..?

மனித இதயத்தின் எடை எவ்வளவு:

 மனித இதயத்தின் எடை எவ்வளவு
 

இதயம் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இருந்தாலும் கூட எடை என்பது முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

 இதயம் பெண்களுக்கு தோராயமாக 250 முதல் 300 கிராம் எடையும் மற்றும் ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் எடையும் இருக்கும் என்று தோராயமாக கூறப்படுகிறது. இதனை அவுன்ஸ் முறையில் கூற வேண்டும் என்றால் பெண்களுக்கு 9 முதல் 11 அவுன்சும் மற்றும் ஆண்களுக்கு 11 முதல் 12 அவுன்சும் இருக்கும் என்று தோராயமாக சொல்லப்படுகிறது.  

அதுபோல ஒரு மனிதனின் இதய துடிப்பு என்பது ஒரு நாளைக்கு 1 லட்சம் முறையும் மற்றும் 1 மாதத்திற்க்கு 30 முறையும் மற்றும் வாழ்நாள் முழுவதும் 2.5 முறையும் தோராயமாக துடிக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆண்களின் இதயத்தை ஒப்பிட்டு பார்க்கும் போதும் பெண்களின் இதயம் அளவில் கொஞ்சம் பெரியதாக இருக்கும் என்றும் ஆய்வின் படி கூறுகிறார்கள்.

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாகியபோது வயிற்றில் முதலில் தோன்றிய உறுப்பு இதயம் ஆகும்.

இத்தகைய இதயம் நமது உடலில் உள்ள இரண்டு நுரையீரல்களுக்கும் நடுவே அமைந்துள்ளது. இந்த இதயத்தை நம் கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நம்முடைய உள்ளங்கையின் அளவில் சராசரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 

 

Advertisement