வீட்டில் நகை மற்றும் பணம் எவ்வளவு வைத்திருக்கலாம் தெரியுமா.?

how much gold to keep at home in tamil

நகை மற்றும் பணம் எவ்வளவு இருக்க வேண்டும்

வணக்கம் நண்பர்களே..! இந்த காலத்தில் நகை மற்றும் பணம் இல்லாத வீடுகளே இல்லை.  ஆனால் அந்த  நகை மற்றும் பணத்தை எவ்வளவு வைத்திருக்கலாம் என்று யாருக்காவது தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.  ஆனால் படங்களில் பார்த்திருப்போம். வருமான வரித்துறையிலுருந்து வந்து பரிசோதிப்பார்கள். இவ்வளவு பணம் இருக்கிறது இது எப்படி வந்தது என்று கேட்பார்கள். அவர்களும் அதற்கு தகுந்தது போல் பதில் சொல்வார்கள். ஆனால் இது படத்திலும் மட்டுமில்லை நம்மளுடைய வாழ்க்கையிலும் பார்க்க வேண்டியது. வாங்க இந்த பதிவின் மூலம் எவ்வளவு பணம் மற்றும் நகை வைத்திருக்கலாம் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

எவ்வளவு நகை வைத்திருக்கலாம்:

அரசு விதிமுறையின் படி வீட்டில் திருமணமான பெண்கள் 62.5 சவரன் நகைகளை வைத்திருக்கலாம். அதுவே திருமணமாகாத பெண்கள் 31.25 சவரன் வைத்திருக்கலாம். அதுவே திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என இருதரப்பு ஆண்களுமே  12.5 சவரன் நகைகள் வைத்திருக்கலாம்.

மேல் கூறப்பட்டுள்ள நகைகளை விட அதிகமாக இருந்தால் அதற்கான சரியான விவரத்தை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்:

நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு வைத்திருக்கீர்கள் என்றால் தாராளமாக வைத்திருக்கலாம். ஆனால் கணக்கு இல்லாத தொகையை வைத்திருக்கும் போது தான் பிரச்சனை. எடுத்துக்காட்டாக நீங்கள் 30 லட்சம் பணம் வைத்துள்ளீர்கள் என்றால் அதற்குரிய கணக்கு வைத்திருக்க வேண்டும். அதனால் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் ஆனால் அதற்குரிய கணக்கு வைத்திருக்க வேண்டும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com