எவ்வளவு தான் ட்ரை பண்ணாலும் இவ்வளவு தான் முடி வளரும்.! இது தெரியாம இத்தனை வேஸ்ட் பண்ணிட்டோமே.!

How much hair grows per day in tamil

ஒரு நாளைக்கு முடி எவ்வளவு வளரும்

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். இதற்காக பல குறிப்புகளையும் பயன்படுத்துகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் குறிப்பை வைத்து கொஞ்ச நாட்கள் கழித்து நீங்களே பார்ப்பீர்கள் என்னடா இவ்வளவு செய்திருக்கோம் முடி வளரவேயில்லை என்று  நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் என்னகுறிப்பை பயன்படுத்தினாலும் ஒரு நாளைக்கு இவ்வளவு முடி வளருமா.! வாங்க அப்படி ஒரு நாளைக்கு முடி எவ்வளவு முடி வளரும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஒரு நாளைக்கு முடி எவ்வளவு வளரும்:

how much hair grows in a week in tamil

முடியின் வளர்ச்சியை  மூன்று விதமாக வளர்கிறது. ஒவ்வொரு கட்டமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இருக்கும்.

அனாஜென் கட்டம் என்பது 3-10 ஆண்டுகள் நீடிக்கும் செயலில் முடி வளர்ச்சி காணப்படும்.

கேடஜென் என்பது முடி வளர்ச்சியை நிறுத்தும் நிலை மாறுதல் மற்றும் இந்த நிலை 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கும்.

3 வாரங்களில் வழுக்கை தலையிலும் முடி வளரும் இதை செய்தால் ..

டெலோஜென் என்பது முடி உதிர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும் ஓய்வுக் கட்டமாகும்.

 ஒரு நாளைக்கு முடி வளர்ச்சி விகிதம் 0.3 முதல் 0.4 மிமீ வரை இருக்கும். இதனை வைத்து  ஒரு வாரத்திற்கு முடியின் வளர்ச்சி சுமார் 2.1 மிமீ இருக்கும். அதேபோல் 2 வாரத்தில்  4.2 மி.மீ. ஒரு மாதத்தில் 0.5 முதல் 1.7 செமீ வரை வளரும். ஒரு வருடத்தில் சராசரி முடி வளர்ச்சி விகிதம் 6 அங்குலங்கள் அதாவது 15 செ.மீ வரை வளரும்.  

யாருக்கு முடிக்கு வேகமாக வளரும்:

பெண்களை விட ஆண்களுக்கு முடி வேகமாக வளருமாம். அதே போல் முடியின் வளர்ச்சி 15 வயது முதல் 30 வயது வரை தான் இருக்கும். அதன் பிறகு முடி உதிர்வு, நரை முடி பிரச்சனை போன்றவற்றை சந்திக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் அனைவருமே முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர் என்றால் முக்கியமான காரணம் உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களினால் இளம் வயதினருக்கே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn