ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How Much Oxygen Does A Human Need

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த உலகில் வாழும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை. ஆக்ஸிஜன் இல்லை என்றால் நம்மால் உயிர் வாழ முடியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உணவு | Oxygen Level Increase Food Tamil

Oxygen Inventor in Tamil:

Oxygen Inventor in Tamil

ஜோசப் பிரிஸ்டலி என்பவர் தான் ஆக்சிஜனை முதன் முதலில் கண்டுபிடித்தவர். இவர் தனது வாழ்நாளில் 150-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருக்கிறார்.

இவர் கண்டறிந்த ஆக்சிஜனும், கார்பன்-டை ஆக்சைடும் தான் இவரது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதுபோல 1777 ஆம் ஆண்டு அந்துவான் இலவாசியே என்பவர் தான், ஜோசப் பிரிஸ்டலி கண்டுபிடித்த வாயுவிற்கு ஆக்ஸிஜன் என்ற பெயர் வைத்தவர்.  

ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை..?

ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை

உடலில் இருக்கும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை இரத்த ஆக்ஸிஜன் என்று அழைக்கப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் நுரையீரல் முதல் உடல் முழுவதும் இருக்கும் பாகங்களுக்கு கொண்டு செல்கிறது. அது ஒரு குறிப்பிட்ட வகை உயிரணுக்களால் ஆக்ஸிஜன் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலில் நுழைந்ததும் ஆக்சிஜனை தனியாக பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்க செய்கிறது. இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் மற்றும் புரதங்கள் ஆக்ஸிஜனை மற்ற உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

ஆக்சிஜன் அதிகரிக்க லிங்க முத்திரை | Linga Mudra Benefits in Tamil

 

ஒரு மனிதனின் நுரையீரல் 28 டிகிரி C வரை 1 நிமிடத்திற்கு சுமார் 5-6 மில்லி ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறது. 

அதுபோல நுரையீரல் ஆக்சிஜன் அளவு 36 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக இருந்தால், நுரையீரல் 11 மிலி நிமிடத்தில் சுமார் 5% அளவிற்கு ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறது.

 ஒரு மனிதனின் உடல் ஆரோகியமாக இயங்குவதற்கு 65 சதவீதம் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதுபோல 18 சதவீதம் கார்பன் டைஆக்சைடு, 10 சதவீதம் ஹைட்ரோஜன், 3 சதவீதம் நைட்ரோஜன் தேவைப்படுகிறது.  

மேலும் கல்லீரலுக்கு 20 சதவீதம் ஆக்ஸிஜனும், மூளைக்கு 18 சதவீதம் ஆக்ஸிஜனும், இதயத்துக்கு 12 சதவீதம் ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது.

அதுபோல ஒரு மனிதனின் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் ஆக்ஸிஜனின் அளவு 95% மற்றும் 100% இடையே இருக்கும். ஆனால் உங்களின் நுரையீரலில் ஏதாவது நோய் இருந்தால் ஆக்ஸிஜனின் அளவு 88% முதல் 92% வரை மாறுபடும்.

அதுமட்டுமில்லாமல், உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருந்தால் தலைவலி, ஓய்வின்மை, நெஞ்சு வலி, மூச்சு திணறல், குழப்பம், மயக்கம், உயர் இரத்த அழுத்தம், இதயத்தின் துடிப்பு குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement